உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி வெடிக்காமல் இருக்க இதை செய்யவும...
இன்று நாம் பெரும்பாலான நபர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதை அவதானித்திருப்போம். இதில் சில நல்ல காரியங்கள் இருந்தாலும், அதிகமாக கெட்ட காரியங்களும் இருந்து வருகின்றது.
படிக்கும் குழந்தைகள் கையில் ஸ்மார்ட்போன் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் இருக்கும் பலவகையான விளையாட்டுக்கு அடிமையாகவும் செய்கின்றனர்.
சில தருணங்களில் சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் நேரத்தில் கூட மொபைல் போனை பயன்படுத்தும் வேலையில் அது அசம்பாவிதத்தில் சென்று விடுகின்றது. இந்த சம்பவம் சமீபத்தில் கூட கேரளாவில் நடைபெற்றது.
ஸ்மார்ட்போன் அசம்பாவிதத்தை எப்படி தவிர்ப்பது?
நேரடியான சூரிய ஒளியில் உங்களது ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிலும் கோடை காலங்களில் கார்களில் வைப்பதையும் தவிர்க்கவும்... ஏனெனில் இந்த தருணங்களில் வெடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
போன் சார்ஜ் ஆகும் போது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உற்பத்தியாளர்களால் கொடுக்கப்பட்ட சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும்.
இரவு முழுவதும் அல்லது நீண்ட நேரங்களில் சார்ஜ் செய்வதை செய்ய வேண்டாம். போனில் முழுவதுமான சார்ஜ் ஏறிய பின்பு உடனே பிளக்கில் இருந்து அகற்றிவிடவும்.
ஸ்மார்ட் போன் சூடாக இருந்தால் பயன்படுத்துதல் வேண்டாம். உடனே அணைத்து வைத்துவிட்டு, சற்று குளிர்ந்த பின்பு பயன்படுத்தவும்.
உங்கள் ஸ்மார்ட்போனின் மென்பொருளை எப்போதும் சரியான நேரத்தில் புதுப்பிக்கவும். இவ்வாறு செய்வதால் அதிக வெப்பம் உட்பட பல சிக்கல்களை தீர்க்கும்.