ரத்த சர்க்கரை அளவை சரியாக கணிக்கும் நேரம் எது தெரியுமா?
நாள்பட்ட நோய்களின் ஒன்றான நீரழிவு நோய் தற்போது உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் பல்வேறு உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
உயர் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது அதற்கு உரிய சிகிச்சையளிக்காமல் விட்டால் காலப்போக்கில் இது இதய நோய், நரம்பு பாதிப்பு, கண் பிரச்சனை மற்றும் இன்னும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிலும் குறிப்பாக முதியோர்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். அடிக்கடி அவர்களின் ரத்த சர்க்கரை அளவை சரிபார்த்து கொள்வது அவசியம்.
ரத்த சர்க்கரை பரிசோதனை
உலக சுகாதார அமைப்பு (WHO)படி, “டைப் 2 நீரிழிவு நோயால் மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவற்றை தடுப்பதற்கு ஆரம்பகால நோய் கண்டறிவது மிக முக்கியம். உலகளவில் ரீதியில் சுமார் 42.2 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 10.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.”
பொதுவாக உணவு சாப்பிடும் முன்னர் இரத்த சர்க்கரை அளவு 70 முதல் 100 mg/dL வரை இருக்கும்.
100-க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது என்ற அர்த்தம்.
நீரிழிவு நோயாளர்கள் தினமும் பல முறை ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக உணவு, உடற்பயிற்சி, படுக்கைக்கு முன் மற்றும் குறைந்த ரத்த சர்க்கரை இருப்பதால் ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |