தலைமுடி உதிர்வை அதிகப்படுத்தும் பழக்கங்கள்: இனி செய்யாதீங்க
பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி பளபளப்பான மற்றும் வலுவான கூந்தல் வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இதனை இலகுவில் பெறுவதற்காக விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களை தலைக்கு பயன்படுத்துவார்கள்.
அதே சமயம், ஆரோக்கியமான உணவு பழக்கமும் கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மன அழுத்தம் மற்றும் சூழல் மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் கூட தலைமுடி உதிர்வு அதிகமாகலாம். எப்போதும் உடல், உள ரீதியாக ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்கவும்.
அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை குறைக்கும் பழக்கங்கள் என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
தலைமுடி உதிர்தலை அதிகப்படுத்தும் தவறுகள்
1. சர்க்கரை அதிகமாக எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை தாண்டி தலைமுடி ஆரோக்கியத்திற்கு அதிகமாக தீங்கு விளைவிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பிற்கு சர்க்கரை முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. இது முடியை இழக்கச் செய்யலாம். ஆண்கள் மற்றும் பெண்களின் வழுக்கைக்கு இது தான் முக்கிய காரணம்.
2. உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் இன்சுலின் ஸ்பைக்கை ஏற்படுத்தும். இது சுத்திகரிக்கப்பட்ட மாவு, ரொட்டி மற்றும் சர்க்கரை போன்ற உணவுகளில் இருக்கும். இப்படியான உணவுகளால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உருவாகும். இது இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜன்களின் ஸ்பைக்கை உருவாக்கும். குறித்த ஹார்மோன்கள் மயிர்க்கால்களுடன் இணைக்கப்பட்டுள்ள தலைமுடியை உதிரச் செய்யும்.
3.தலைமுடி வளர்ச்சிக்கு கெரட்டின் எனப்படும் புரதம் அவசியம். ஆல்கஹால் பாவனை இந்த புரதத் தொகுப்பிற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது தலையில் இருக்கும் முடியை உதிரச் செய்து வழுக்கை வர காரணமாக அமையும். அதிக மது அருந்துதல் ஒருவருக்கு ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வை ஏற்படலாம். அத்துடன் உரோமக்கால்களை சிதைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |