வாழவே பிடிக்கவில்லை.. சாக போறேன்! வீடியோவை அனுப்பிவிட்டு சூர்யா தேவி செய்த செயல்! அதிர்ந்துபோன போலீசார்
டிக்டாக் மற்றும் யுடியூபில் ஆபாசமாக பேசியே பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் நடிகை வனிதாவின் 4-ஆவது திருமணம் குறித்து பேசி மிகவும் பிரபலமானவர் தான் சூர்யா தேவி.
இவர் தற்போது, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மதுரை மாநகர ஆணையர் அலவலகத்திற்கு வீடியோ அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து பதறிப்போன போலீசார் சூர்யா தேவியை காப்பாற்ற தீயணைப்புத்துறை உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நிலையில், அங்கு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த சூர்யா தேவியை பார்த்து மிரண்டு போன கூத்து அரங்கேறியுள்ளது.
மேலும், எதுவுமே தெரியாதது போல் படுக்கையில் இருந்து எழுந்தார். இனிமேல் வாழவே பிடிக்கலனு கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுவிட்டு, கண் அசந்து தூங்கிக் கொண்டிருந்த சூர்யா தேவியின் அலப்பறையால் கடுப்பான போலீசார் செய்வதறியாமல் சூர்யா தேவியையும், அவரது மகளையும் பக்கத்து தெருவிலுள்ள உறவினர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
இதன் பின்னர், வீட்டை விட்டு வெளியில் வந்த சூர்யாதேவியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திட்டி தீர்த்து வார்த்தைகளால் வசைபாடியுள்ளனர்.