மூல நோய்களை விரட்டியடிக்கும் அற்புத கீரை... ஆனால் இப்படியொரு கண்டிஷனா?
கிராமப்புறங்களில் எங்கும் படர்ந்து கிடக்கும் துத்திக்கீரையின் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
துத்திக்கீரை
முருங்கை, வாழையைப் போன்று இந்த செடியிலும் வேர், பூ, இலை, மட்டை அனைத்தும் மருத்துவ குணம்கொண்டவையாகும். காண்பதற்கு இதய வடிவில் இருக்கும் இதன் காய்கள் சக்கரம் போன்று காணப்படும்.
பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்த மாட்டாத இதனை மருந்தாக பயன்படுத்துவார்கள். ஆனால் வாரம் இரண்டு முறை பருப்புடன் சேர்த்து இந்த கீரையை சாப்பிடலாம்.
துத்திக் கீரையின் நன்மைகள்
இந்த கீரையானது குறிப்பாக மூல நோய்க்கு மருந்தாக பார்க்கப்படுகின்றது. மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை பறித்து சுத்தம் செய்து, விழுதாக அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால் மூல அடியோடு விரட்டப்படும்.
மலச்சிக்கல், சிறுநீர் எரிச்சல், வாயு வியாதிகள், குடல் புண் பிரச்சினை, செரிமான கோளாறு, தசையை பலமடைய செய்வதுடன், உடம்பின் சூட்டை தணிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றது.
உடம்பில் ஏற்படும் கட்டி, புண்கள் ஏற்பட்டால் அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றை கலந்து கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள் மற்றும் மாதவிடாய் தொந்தரவுகளையும், வெள்ளைப்படுதல் பிரச்சினையும் குணப்படுத்துகின்றது. நெய்யில் கீரையை வதக்கி சாதத்தில் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் தீரும்.
எலும்பு முறிவு ஏற்பட்டாலும் அந்த இடத்தல் குறித்த இலையை அரைத்து பூசினால் விரைவில் எலும்புகள் ஒன்று சேருமாம். ஆனால் அந்த பகுதியை அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த ரசத்தை குடித்தால் சிறுநீரக நோய்கள் நம்மை அண்டாது. இதே போன்று வாய், பற்கள், இரைப்பை மற்றும் பெருங்குடல், ஆசன வாய் புண்கள் வலிகள், எரிச்சலை நீக்கவும் செய்வதுடன், படர்தாமரைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.
இதன் பூக்கலை பசும்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி பருகினால் நுரையீரல் தொந்தரவுகள் நீங்கி ஆஸ்துமா, காசநோய் பிரச்சினைகள் தீருமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |