கனவில் துளசி செடியை பார்ப்பது நல்லதா? கெட்டதா? கனவு சாஸ்திரம் பலன் இதோ
கனவில் துளசி செடியை பார்ப்பது நல்லதா? கெட்டதா? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தூக்கம் என்பது மனிதரின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். தூக்கத்தின் போது கனவுகள் வருவது இயல்பான ஒன்றே.
இந்த கனவுகள் எதிர்கால நிகழ்வுகளை நோக்கி நம்மைச் சுட்டிக்காட்டுகின்றது என்று கூறப்படுகின்றது. சில கனவுகள் நம்மை சிந்திக்க வைத்தாலும், சில கனவுகள் பயங்கரமானதாக இருக்கும்.
தற்போது தெய்வீக மூலிகை என்று கூறப்படும் துளசி செடி கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம்.
கனவுகளின் அர்த்தம்
நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது சாலையோரத்தில் புளியமரங்கள் நன்றாக பூத்து, காய்கள் காய்த்து தொங்குவதை பார்த்தால் இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாம். இதனால் கை நிறைய சம்பளம் கிடைப்பதுடன், வருமானமும் அதிகரிக்குமாம்.
இதே போன்று தோட்டத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கியிருக்கும் போது அதில் நடந்து செல்வது போன்று கனவு வந்தால் வம்சம் விருத்தியடைய போவதாக அர்த்தமாம். செடி மற்றும் மரத்தில் இருக்கும் பூக்களையோ பழங்களையோ பறிப்பது போல உங்கள் கனவில் கண்டால், நல்ல அறிகுறியாகும். பூச்செண்டு ஒன்றை பரிசாக கொடுப்பது போல கனவு வந்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.
துளசி மற்றும் மருதாணி செடிகளும் கனவில் வந்து போகும், அதாவது மருதாணியை அரைத்து கையில் பூசி, சிவந்திருப்பது போன்று கனவு வந்தால், உங்களது நீண்ட நாள் நோய்கள் காணாமல்ம போகுமாம். துளசி செடி கனவில் வந்தால் பெருமாளின் ஆசியும் குல தெய்வத்தின் ஆசியும் கிடைக்கும்.
மரத்தில் ஏறுவது போன்று கனவு கண்டால் உங்களுக்கு நல்ல வாய்ப்பு வரப்போவதாக அர்த்தம்.
தோட்டத்தில் செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால் உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும் நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
முட்கள் நிறைந்த செடியில் உங்களின் துணி மாட்டி கொண்டது போல கனவு வந்தால், உங்களின் பிரச்சினைகள் விலகப்போகிறது என்று அர்த்தம். சப்பாத்திக்கள்ளி செடியை வெட்டி அகற்றுவதாக கண்டால் எதிரிகளின் தொல்லை விலகும்.
வாழைமரம் குலை தள்ளியிருப்பதாக கனவு கண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கப்போவதாக அர்த்தம். மாமரம் காய்த்திருந்தால் திருமண தடைகள் நீங்குவதாக அர்த்தம்.
பலா மரம் காய்த்திருப்பதை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சனைகள் விலகுவதுடன், பூர்வீக சொத்துக்களும் கைக்கு கிடைக்குமாம்.
கனவில் அத்தி மரம் வந்தால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற போவதை குறிக்கும். கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்யும் தொழில் மேன்மை அடையும்.
அரச மரத்தை கனவில் கண்டால் அரசு வேலை தொடர்பான நல்ல செய்தியும் தேடி வரும்.
கெட்ட கனவுகள்
கனவில் பட்டுப்போன மரத்தை கண்டால் விரும்பத்தகாத சோக நிகழ்வு நடக்கப் போகின்றது என்று அர்த்தம்.
மரத்தில் இலை மற்றும் காய், கனிகளை பறிப்பது போன்று கனவு வந்தால் நோய்கள் வருமாம்.
மரம் காய்ந்து முறிந்து விழுவது போன்றோ, வேரோடு சாய்வது போன்று கனவு வந்தால் கெட்ட சகுனம் ஆகும்.
கெட்ட கனவு கண்ட உடன் எழுந்து தண்ணீர் குடித்து விட்டு படுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |