முதல் படத்திற்கு முன் ஆர்யா எப்படி இருக்காருனு பாருங்க...அப்போ சயீஷாவா இது? அதிர்ச்சியான ரசிகர்கள்
நடிகர் ஆர்யா 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக டெடி என்ற படத்தில் கூட நடித்து இருந்தனர்.
நடிகை சயீஷாவிற்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

மேலும், கடந்த ஆண்டு ப ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது.
வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று இருந்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆர்யா அவர்கள் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆர்யா உடைய சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால், 2000ம் ஆண்டு போது ஆர்யா உடைய புகைப்படத்தையும் சாய்ஷா புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்கள். அதில் ஆர்யா இளம் வயதிலும், சாயிஷா 2 அல்லது 3 வயது குழந்தையாகவும் இருக்கிறார்.
இந்த இரு புகைப்படத்தையும் ஒன்றாக பதிவிட்டு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.