தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா? எளிய வீட்டு வைத்தியம் இதோ
தொண்டையில் ஏற்படும் பிரச்சனையான தொண்டை கரகரப்பு, தொண்டை வலி இவற்றிற்கான எளிய வீட்டிய வைத்தியம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மழைக்காலம் என்று வந்துவிட்டாலே தொண்டை சம்மந்தமாக பிரச்சனையும் வந்துவிடுகின்றது. தொண்டையில் சளி கட்டுதல், வலி, கரகரப்பு ஏற்படுகின்றது.
இதற்காக மருந்தகங்களில் மருந்து வாங்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. இந்நிலையில், தொண்டை வலிக்கான வீட்டு வைத்தியம் குறித்து தெரிந்து கொள்வோம்.
வீட்டு வைத்தியம் என்ன?
வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவை தொண்டையில் ஏற்படும் வீக்கம், வலி இவற்றினை சரிசெய்யும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், தொண்டை புண், கரகரப்பு இவை சரியாகும்.
கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு இஞ்சியைத் தட்டி சேர்த்து, பின்பு வடிகட்டி குடித்தாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
துளசி இலை தொண்டை பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை அளிக்கின்றது. அதாவது கொதிக்கும் நீரில் துளசி இலைகளை சேர்த்தோ, தனியாக துளசி இலை மட்டும் சாப்பிட்டாலும் தொண்டை பிரச்சனை ஏற்படும்.
கிராம்பு, ஏலக்காய், மிளகு இவற்றினை சேர்த்து டீ-யாக போட்டு குடித்தால் தொண்டை பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
இதே போன்று ஆவிபிடிப்பதும், தொண்டை கரபரப்பு, தொண்டையில் ஏற்படும் சளியினை நீக்குமாம். இதற்கு யூகலிப்டஸ் தைலத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |