தொண்டை வலியை வேறூடன் குணப்படுத்தும் வைத்தியம்: எப்படி செய்யலாம்?
பருவ கால மாற்றம் ஏற்படும் பொழுது சில உடல்நல குறைபாடுகள் ஏற்படும். இதற்கு மருத்துவரிடம் சென்று மருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
கோடைக்காலம் முடிந்து, குளிர்காலம் ஆரம்பிக்கும் சமயத்தில் சிலருக்கு தொண்டையில் வலி வரும். இது வறண்ட காற்றை சுவாசித்தல், சளி பிடிப்பது மற்றும் ஒவ்வாமை ஆகிய காரணங்களால் ஏற்படும்.
தொண்டை வலி வந்து விட்டால் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை விட, வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்யலாம்.
அந்த வகையில், தொண்டை வலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் பாட்டி வைத்தியங்கள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்.
1. தொண்டை வழக்கத்திற்கு மாறாக வலி வருவது போன்று உணர்வு இருந்து கொண்டே இருத்தல்.

2. உணவு மென்று விழுங்குவது கடினமாக இருத்தல்
3. சுவாசிக்கும் பொழுது ஒருவிதமான அசௌகரியம் இருத்தல்.
4. மற்றவர்களிடம் பேசும் பொழுது வலி வருதல்.
5. தொண்டை வலியுடன் இருக்கும் சமயத்தில் தொண்டையை சுற்றியுள்ள இடத்தில் வீக்கம் இருத்தல்.
பாட்டி வைத்தியங்கள்
1. உப்பு நீரில் கொப்பளித்தல்
உப்பு உடன் வெதுவெதுப்பான நீர் கலந்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். அப்படி கொப்பளிக்கும் பொழுது தொண்டை வலி குறைய வாய்ப்பு உள்ளது. தினமும் இரண்டு முறை கொப்பளிக்கும் பட்சத்தில் சிறந்த பலன்களை பெறலாம்.

2. தேன்
ஒரு ஸ்பூன் தேன் எடுத்து சூடான தண்ணீருடன் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேன், உங்களுடைய தொண்டையில் படிந்திருக்கும் சளியை அகற்றும். இருமல் பிரச்சினை உள்ளவர்களுக்கு தேன் சிறந்த மருந்தாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

3. ஆவி பிடித்தல்
வறண்ட காற்று காரணமாக ஏற்படும் தொண்டை வலியை ஆவி பிடிப்பது மூலம் சரிச் செய்யலாம். காற்றில் ஈரப்பதம் சுவாசம் வழியாக உள்ளே சென்று ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. நீராவியை கொண்டு வைத்தியம் செய்யும் பொழுது தொண்டை, மூக்கு மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சளி மெதுமெதுவாக உள்ளே இறங்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |