ஒரே நேரத்தில் 3 பூஞ்சைகளினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்... அதிர்ச்சியில் மருத்துவர்கள்
இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று பூஞ்சைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலேயே சுமார் 4 ஆயிரம் பேருக்கு மேல் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை மட்டுமின்றி மஞ்சள் பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என கலர் கலராக புதிய வகை பூஞ்சைகள் உருவாகி வருவது மனித இனத்தையே அச்சுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 45 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டுள்ளார்.
ஆனால் அவருக்கு அடுத்தடுத்து கருப்பு, மஞ்சள், வெள்ளை என மூன்றுவித பூஞ்சைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த இளைஞருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் கருப்பு வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று வகை பூஞ்சைகளும் ஒரே நபருக்கு பாதிக்கப்பட்டு இருப்பது இது தான் முதல் முறையாக இருக்கலாம் என மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.