வைரலாகும் வினோத திருமணம்: ஒரே மணமகனை மணந்த மூன்று சகோதரிகள்!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும், ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய இணைந்து முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதன்படி, அப்பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்வில், மூன்று சகோதரிகளும் அந்த இளைஞருடன் திருமண பந்தத்தில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணச் சடங்குகளின் போது, மணமக்கள் அக்னியை வலம் வந்து, பாரம்பரிய சடங்குகளை நிறைவேற்றியதுடன், பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.

குறித்த வினோத திருமணத்தின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவை வேகமாக வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்தன. ஆரம்பத்தில், இது சமூக வலைதளங்களுக்காக உருவாக்கப்பட்ட காட்சிப் பதிவு மட்டுமே என பலரும் நினைத்தனர்.

ஆனால், பின்னர் அந்தத் திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் என சம்பந்தப்பட்டவர்கள் உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், திருமணமான நால்வரும் தங்களது சமூக வலைதளக் கணக்குகள் மூலம் காணொளிகளை வெளியிட்டு, இந்தத் திருமணம் உண்மையானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்திற்கும், கலவையான விமர்சனங்களுக்கும் உட்பட்டு படு வைரலாகி வருகின்றது.
BREAKING
— Sunil Yadav (@sunilyadav21) July 23, 2026
UP के अमरोहा में 3 सगी बहनों ने एक ही लड़के से शादी कर ली है
यह बहने वीडियो कंटेंट बनाती थी और लड़का उनके पति का रोल निभाता था। रील बनाते बनाते रियल पति बन गया विक्कू।
विकास उर्फ विक्कू ने मंदिर में सरोज, सावित्री और संतोष के साथ सात फेरे लिए
उनकी मांग में… pic.twitter.com/fTINEFyqVL
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |