Vastu Tips: உங்கள் வீட்டிற்கு இந்த பறவைகள் வந்தால் அதிர்ஷ்டமாம்
நாம் குடியிருக்கும் வீடுகளில் இந்த மூன்று பறவைகளில் ஏதாவது வந்தால் அதிர்ஷ்டம் நிறைந்ததாக பார்க்கப்படுகி்றது.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு பொருட்களை வெளியே எடுத்துப் போடுவதும், வெளியே இருந்து ஒரு பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது அதிகமாக வாஸ்து பார்க்கப்படுகின்றது.
இந்த வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்.
அந்த வகையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில பறவைகள் உங்களது வீட்டில் முற்றத்திலோ அல்லது கூரையிலோ அமர்ந்திருந்தால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
உங்களது வீட்டின் உச்சத்தில் அல்லது மொட்டை மாடியில் அமர்ந்திருக்கும் பறவைக்கு உணவளித்தால் உங்களது வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
image: adobe stock
ஆந்தை
அசுபமான பறவை என்று கருதப்படும் ஆந்தை வீட்டிற்கு வந்தால் மங்களரமாக இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆந்தையானது செல்வ செழிப்பின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. ஆகையால் எந்த வீட்டிற்கு ஆந்தை வந்ததோ அந்த வீட்டில் செல்வமழை பொழியும் என்று கூறப்படுகின்றது.
'
காகம்
இதே போன்று காகம் வீட்டின் முற்றத்தில் வந்து கரைந்தாலோ அல்லது கூரை மீது நின்று கரைந்தாலோ வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதாக கூறப்படுகின்றது. மேலும் இந்து மதத்தில் காகம் வீட்டிற்குள் வருவது மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுவதுடன், இவை மூதாதையர்களுடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகின்றது.
கிளி
வீட்டின் வாசலில் கிளி வந்து அமர்ந்திருந்தால் அவை மங்களரமானதாக கருதப்படுவதுடன், செல்வத்தை கொண்டு வருவதற்கான அறிகுறி என்றும் கூறப்படுகின்றது.
மேலும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் வீட்டிலும் வாழ்க்கையில் நிலைத்திருக்கும் என்றும் குபேரனுடன் தொடர்புடையது என்றும் கூறப்படுகின்றது. கிளி வரும் வீட்டில் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
