மீண்டுமொரு அனர்த்தமா? நகரத்தை ஆக்கிரமித்து முன்னெச்சரிக்கை கொடுக்கும் காகங்கள்! பீதியை கிளப்பும் வீடியோ
இயற்கைக்கும் பறவைகளுக்கும் ஏதோ ஒரு சக்தியோ அல்லது ஈர்ப்போ இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் இயற்கை அனர்த்தங்களை விஞ்ஞானிகள் கணிப்பதற்கு முன், பறவைகள் கணித்து விடுகின்றன.
அப்படித்தான் அண்மையில் கூட துருக்கி சிரியா நிலநடுக்கத்தின் போது கூட அந்நகரத்தை சுற்றி எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுற்றித்திரிந்தது நாம் அறிந்ததே. மேலும், இந் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இன்னும் உறுதிப்படுத்த முடியாத அளவிற்கு தொடர்ந்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், இயற்கை மீண்டுமொரு ஆபத்திற்கு அத்திவாரமிடுகிறதா? என்று தெரியவில்லை.
ஆம், அவ்வாறன சம்பவம் ஒன்று தான் தற்போது நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஜப்பானிய தீவான ஹோன்ஷுவில் ஆயிரக்கணக்கான காகங்கள் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறன.
இத்தீவில் மர்மமான முறையில் காக்கைகள் கூடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி மக்களை பீதியின் உச்சி வரைக்கும் அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது.
மேலும், காகங்கள் வீதிகள், கட்டிடங்கள், வாகனங்கள் என எல்லாவற்றையும் ஆக்கிரமித்து கூட்டம் கூட்டமாக சூழ்ந்து இருக்கின்றது. இது தொடர்பில் தெளிவான தகவல்களை தெரிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியைக் காணலாம்.