வெற்றிலை போடுபவர்களுக்கு இந்த நோய் வரவே வராது!
பொதுவாக எமது வீடுகளில் மதிய உணவிற்கு பின்னர் வெற்றிலைப் போடுவார்கள், இது தமிழர்களின் பண்பாட்டு வழக்கம்.
வெற்றிலையில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலிலுள்ள வயிற்றுபுண்கள், அல்சர், நீரிழிவு போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் குறித்து தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
மருத்துவ குணங்கள்
வெற்றிலையிலுள்ள சில பதார்த்தங்கள் செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.
உடல் எடை அதிகரிப்பினால் உடம்பில் கெட்ட கொலஸ்ரோலின் அளவு அதிகமாக இருக்கும், இவர்கள் வெற்றிலை சாப்பிடுவதால் எடை குறைந்து ஆரோக்கியமாக வலம்வரலாம்.
மூட்டு வலியுள்ளவர்கள் வெற்றிலை இலைகளை எடுத்து அதனை நன்றாக அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை வலியுள்ள இடத்தில் தடவ வேண்டும். இது வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. இவ்வாறு தினமும் பாவிக்கும் போது எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.
சிலருக்கு வயிற்றுள்ள புண்களாலும், வாயிலிருக்கும் சில பக்டீரியாக்களாலும் வாயிலிருந்து துர்நாற்றம் வெளியேறும், இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் தினமும் வெற்றிலையை வாயில் போட்டு மென்டு விழுங்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால் வாய் துர்நாற்றம் இல்லாமல் போகும்.
ஆண்மை பிரச்சினையுள்ளவர்கள் தினமும் இரண்டு தடவை வெற்றிலையை எடுத்துக் கொள்ளவது சிறந்தது. ஏனெனின் இதிலுள்ள சில பதார்த்தங்களுக்கு இரத்த நாளங்களை சீரமைத்து ஆண்மை குறைப்பாட்டை சரிச் செய்கிறது.