எண்கணிதம்: பிறக்கும் போதே லட்சுமியுடன் பிறந்தவர்கள்! அப்படி என்ன அதிர்ஷ்டம்?
எண் கணிதத்தின்படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அனுபவிப்பார்கள்.

எண்கணிதம்
எண் கணிதத்தின்படி, ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்துவமான ஒரு குணம் உண்டு எனப்படுகின்றது. மேலும் சில எண்கள் லட்சுமி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டவை எனப்படுகின்றது.
பூமியில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு அதிர்ஷ்டத்துடன் தான் பிறந்திருப்போம்.
அந்த வகையில் எண் 6 கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் எனப்படுகின்றது. எந்த மாதத்திலும் 6, 15, அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு 6 என்ற எண் இருக்கும்.

அதிர்ஷ்டமான எண்
6 என்ற எண்ணின் ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும். இது செல்வம், செழிப்பு, அழகு, ஆடம்பரம் மற்றும் வசதி ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது.
சுக்கிரன் லட்சுமி தேவியுடன் நேரடியாகத் தொடர்புடையவர். எனவே, 6 என்ற எண்ணைக் கொண்டவர்கள் சுக்கிரனின் செல்வாக்காலும் லட்சுமி தேவியின் அருளாலும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

இதனால் இவர்கள் பிறப்பிலே அதிர்ஷ்டசாலிகளாகப் பிறக்கிறார்கள். மேலும் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் அல்லது ஆடம்பரத்திற்கு ஒருபோதும் பஞ்சம் இருக்காது.
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு தாங்கள் பிறந்த வீட்டில் உள்ளவர்களின் தலைவிதியையும் மாற்ற முடியும் எனப்படுகின்றது.
லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களாலும், அவர்களின் கடின உழைப்பாலும், அவர்கள் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அதிர்ஷ்டம் அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் எனப்படுகின்றது.

எண் கணிதத்தின்படி, 6 என்ற எண்ணைக் கொண்டவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டிருப்பதால் எத்தனை பேர் இருந்தாலும் எளிதில் இவர்களால் மற்றவர்களை இவர்களுக்கு கவர முடியும்.
இவர்களிடம் இருக்கும் ஒரு வலுவான குணம் அவர்களின் தகவல் தொடர்பு திறன் தான். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு ஒரு பலவீனம் உள்ளது.
அதாவது 6 என்ற எண்ணைக் கொண்டவர்கள் பெரும்பாலும் தற்பெருமைக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வார்கள் இதன் பின்னர் தங்கள் செலவுகளைச் சமாளிக்கக் கடுமையாக உழைப்பார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).