பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்... பேரதிர்ச்சியில் திரையுலகம்
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒட்டுமொத்த மக்களும் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸால் மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் என பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், தொரட்டி திரைப்படம் கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் சென்னையில் காலமானார்.
சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ஷமன் மித்ரு காலமானார். ஷமன் மித்ரு மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.