சளி, இருமல் தொல்லையா? காலை உணவாக தூதுவளை தோசை சாப்பிடுங்க... விரைவில் குணமாக்கும்
காலநிலை மாற்றத்தால் அடிக்கடி சிலருக்கு சளி, இருமல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே போகும்.
இதனால் நிம்மதியாக சாப்பிடமுடியாது, வேலைப்பார்க்க முடியாது, மூச்சுக் கூட விடமுடியாது, மூக்கை அடைத்துக் கொண்டு பேசக் கூடமுடியாமல் போகும். இந்த சளிப்பிரச்சினையை திரும்ப வரவிடாமல் தடுக்க காலை உணவாக தூதுவளை தோசை செய்து சாப்பிட்டால் விரைவில் குணமாக்கும்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி- 1 கப்
தூதுவளை இலை – 15
மிளகு – 10
சீரகம்- அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10
செய்முறை
முதலில் புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி ஊறிய பின்னர் தூதுவளை இலை, உப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், சின்ன வெங்காயம் என்பவற்றை அரைத்து கொள்ளவும்.
அதன்பிறகு இந்த மாவை 6 மணி நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும்.
பின்னர் தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான தூதுவளை தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |