பிக் பாஸில் அனல் பறக்கும் ஓட்டிங்! அதிரடியாக வெளியேறும் போட்டியாளர் யார்?
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பம்
பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் 9ம் திகதி சில பிரபலங்களுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தார்கள். தொடர்ந்து மக்களின் வாக்குகள் அடிப்படையில் சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் பல எதிர்ப்புக்கு மத்தியில் அசீம் மற்றும் தனலெட்சுமி ஆகிய இருவரும் தான் சிறப்பாக விளையாடுவதாகவும் மற்றைய போட்டியாளர்கள் அணைவரும் “சேஃப் கேம்” விளையாடுவதாகவும் கமல் சென்ற வாரம் கூறியிருந்தார்.
இந்த வாரம் தலைவர்
இதனை உடைத்து எறியும் வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக அசீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பல போட்டியாளர்களுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பதவிக்கு வந்த முதல் நாளே போட்டியாளர்களுக்கான குழுக்களை மாற்றியுள்ளார். இவரின் இந்த செயலால் குயின்சி வாஷிங் அணிக்கும், விக்ரமன் உள்ளிட்ட நான்கு ஆண் போட்டியாளர்கள் சமையல் அணிக்கும் மற்றும் ரக்ஷிதா சமையல் அணியிலிருந்து வெளியேறி சுத்தப்படுத்தும் அணிக்கு சென்றுள்ளார்.
ஓபன் நாமினேஷன்
இந்நிலையில் கடந்த வாரங்கள் அனைத்திலும் தப்பித்த போட்டியாளர்கள் ஓபன் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். அதில் தனலெட்சுமி, கதிரவன், ஜனனி, குயின்சி, மைனா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
அசீமின் தலைமைத்துவத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. இதனால் குயின்சி இந்த வாரம் வெளியேறுவார் என தகவல் வெளியாகி நிலையில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது பிக் பாஸ்க்கான ஓட்டிங் மிக விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதன்படி, மைனா நந்தனி வெளியேற்றப்படுவார் என தெரியவந்துள்ளது.