முழங்கை கருமை நீங்க வேண்டுமா? அப்போ இந்த ஒரு ஸ்க்ரப் போதும்
மனிதர்கள் எல்லோருக்கும் உடலி்ன் ஏனைய பகுதிகளை விட முழங்கையின் பின்புறத்தில் அதிகமான கருமை காணப்படும்.
இதற்கான காரணம் அந்த இடத்தில் உள்ள தோல் மிகவும் மென்மையானது. இதனால் இங்கு சூரிய ஒளி படும் சந்தர்ப்பத்தில் இவைகள் கருமையாகின்றன.
இந்த கருமையை போக்கி வீட்டிலேயே எப்படி கைகளை பராமரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கைகள் பராமரிப்பு
1.முதலில் ஒரு ஸ்பூன் அளவில் தயிர் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் எடுத்து ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் கலந்து சேர்த்து மிக்ஸ் செய்து கைகளில் கருமை உள்ள இடத்தில் பூசினால் கைகள் மென்மையாக வருவதுடன் அதன் கருமையையும் இழக்கும்.
2.பப்பாளி விதைகள் கொஞ்சமாக எடுத்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் பப்பாசியை எடுத்து நறுக்கி பிசைந்து கருமையாக உள்ள இடத்தில் பூசி அதன் மேல் பப்பாசி விதை பேஸ்டை போட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
இப்படி செய்தால் கைகள் நன்றாக பொலிவு தரும்.
3.காபி, தேன், பால் போன்றவற்றை நன்றாக மிக்ஸ் செய்து கருமை உள்ள இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் பலன் கிடைக்கும்.
மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு ஷயத்தை நீங்கள் செய்தாலும் அது உங்களுக்கு பலனை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |