உங்களை முதன்மைப்படுத்த வெட்கப்படாதீர்கள்! நான் கற்றுகொண்ட பாடம் இதுதான் - மஞ்சிமா மோகன்
தனக்கு கொடுத்த அனுபவங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மஞ்சிமா மோகன் பகிர்ந்துள்ளார்
மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆவார்.
இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு "அச்சம் என்பது மடமையடா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் 2017-ம் ஆண்டு சத்ரியன், இப்படை வெல்லும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு கார்த்திக்கின் மகன் கௌத்தம் கார்த்திக்குடன் திருமணம் நடந்து முடிந்தது.
விமர்சனம்
இந்நிலையில் திருமணத்தின் போதும் அவர் எடை குறித்து பலர் கேலி செய்தும் பல விமர்சனங்களையும் வைத்து வந்தனர்.
ஆனதல் இவர் தக்க பதிலடி கொடுத்திருந்தார். அதில் ” நான் உடல் தகுதியுடன் இருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். என் வேலை தொடர்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அதைச் செய்வேன் என்று கூறியுள்ளார்.
பதிவு
இந்நிலயைில் தற்போது இந்தாண்டில் முக்கியமான நான் இரண்டு விஷயங்களை கற்றுக்கொண்டேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி்ல பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் கூறியள்ளதாவது, உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால் வேறு யாரும் நிற்கமாட்டார்கள். அது நிச்சயமாக மற்ற எல்லாவற்றிற்கும் அடித்தளம். இதேபோல், உங்களை நேசிக்க ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்; உங்களை முதன்மைப்படுத்த வெட்கப்படாதீர்கள்.
மேலும் என்னுடைய உற்ற நண்பரை திருமணம் செய்துகொண்டேன். இந்த ஆண்டு மற்றொரு படி முன்னேறியுள்ளேன். பாதுகாப்பாகவும், திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்! ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ ஒரு வாய்ப்பு! மேலும் இந்த ஆண்டு நான் அதை முயற்சி செய்து என்னை நம்பினேன், இது நான் எடுத்த சிறந்த முடிவு. 2023-ம் ஆண்டின் சாகசம் தொடங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு வைரலாகி வருகின்றது.