நுரையீரலை பாதுகாப்பது கடினமாக இருக்கின்றதா? உங்களுக்கான பதிவு இதோ
நாம் நோய்கள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றால் நமது உடல் செயல்பாட்டின் முக்கிய பகுதியான நுரையீரலை பாதுகாப்பது அவசியம்.
இதற்கான காரணம் ஆட்சிஜனை உடல் உறிஞ்சும் போது கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடுவது இந்த நுரையீரல் தான். இவ்வாறு கார்பன்டைஆக்ஸைடை்டை வெளியிட்டதால் தான் உடம்பிற்கு தேவையான சக்தி கிடைக்கின்றது.
உடல் சீராக செயற்படுவதற்கு உடலுக்கு பக்க விளைவை ஏற்படுத்த கூடிய கிருமிகளை வெளியே தள்ளும். அந்த செயற்பாடு நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பயனை தருகிறது.
இந்த நுரையீரலில் ஏதாவது பாதிப்பு இருந்தால் சுவாச பிரச்சனைகள் வரும். பருவ கால மாற்றங்களில் காற்றின் மூலம் பரவ கூடிய தொற்றுக்கள் அதிகமாகும் . இதனால் நோய் உண்டாக்க கூடும்.
எனவே நுரையீரலை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நுரையீரல் பாதிக்கும் தவறுகள்
1. புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் அதில் காணக்கூடிய வேவையில்லாத இரசாயன பதார்த்தங்கள் நுரையீரலை பாதிக்க செய்கின்றன. இதகால் அது பலவீனமடைகின்றது.
2.ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள் இதில் நன்றாக மூச்சு பயிற்சி செய்யுங்கள் . இப்படி செய்தால் சுவாசத்தின் மூலம் மாசுக்கள் உட்செல்லாமல் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
3. முடிந்த அளவிற்கு தண்ணீர் குடியுங்கள். மன அழுத்தில் இருந்து விலகி இருங்கள். சரிவிகித உணவு முறையை பின்பற்றுங்கள் இரசாயன உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
4. உடலின் வெப்பநிலை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வருடத்தில் குறைந்தது ஒரு முறை உடலை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
5.மாசுகள் இருக்கும் இடத்தில் அவற்றின் பாதிப்பு எம்மை தீண்டாதவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். குளிர் காலங்களில் கூடுதலாக வெளியே செல்லக் கூடாது.
இந்த அனுகூலங்களை பின்பற்றி நுரையீரலை பாதுகாப்பது மனிதனுக்கு முக்கியமாகும் இதில் ஏதாவது பாதிப்பு இருந்தால் சுவாசப் பிரச்சனைகளும் பல சிக்கல்களும் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |