பர்கர்ல சிக்கன் ஏன் இவ்வளவு கம்மியா இருக்கு? கஸ்டமர் செய்த வேலையை பாருங்க!
நம் ஊர்களில் ஹோட்டல்களில் சாப்பிடும்போது, ஊழியர்களுடன் ஒரு சிலர் பிரச்சனை செய்வதை பார்த்திருப்போம்.
நாம் கொடுக்கும் பணத்துக்கு சுவையாகவும், சுகாதாரமாகவும் உணவு வழங்க வேண்டியது அவர்களது கடமை என்பது அவர்களின் வாதம்.
இப்படி ஒரு சம்பவம் லண்டனிலும் நடைபெற்றுள்ளது. ஜேசன் குரேன்ஸ்கி என்பவர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பிளேட்டில் பர்கர் மற்றும் அளப்பதற்கு பயன்படுத்தும் டேப் ஆகியவை இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், சிக்கன் பர்கர் ஒன்றை இந்திய மதிப்பில் ரூ.700 கொடுத்து நந்தோஸ் (Nando's) எனும் கடையில் வாங்கியுள்ள ஜேசன், அதில் உள்ள சிக்கனை தனது ஸ்கேல் கொண்டு அளந்து, சிக்கன் 9 செமீ இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில் உள்ள தக்காளியானது சிக்கனை விட பெரியதாக இருக்கிறது எனவும், இவ்வளவு விலை கொடுத்து வாங்கியும் தனக்கு குறைந்தது 10 செ.மீ அளவு கூட சிக்கன் கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பதிலளித்துள்ள நந்தோஸ் நிறுவனம் உங்கள் புகார்களை தெரிவிக்கும் படி ஒரு இணைய லிங்க்கை பகிர்ந்துள்ளது.
இந்நிலையில் ஜேஸனின் செயலை ஒரு சிலர் பாராட்டியுள்ள நிலையில், பலர் அவரை விமர்சித்துள்ளனர்.
ஒரு சிலர் அவரை கிண்டலும் செய்து வருகின்றனர். ஆனால் நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களின் தரம் குறைந்தால் அதனை கேட்க நமக்கு உரிமை இருக்கிறது. அது சாலோயோர கடைகளாக இருந்தாலும் சரி, பெரிய பெரிய மால்களாக இருந்தாலும் சரி.