டூத் பேஸ்ட்டில் இருக்கும் இந்த பொருள் உங்க குடலையே அழிச்சிடுமாம்! அதிர்ச்சி தகவல்... எச்சரிக்கை
நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் உள்ள ஒரு பொதுவான பொருள் குடல் அழற்சிக்கு வழிவகுப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், டூத் பேஸ்ட்டில் குடல் அழற்சியைத் தூண்டும் ஆன்டி-மைக்ரோபியல் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் டூத் பேஸ்ட்டில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பொருளான ட்ரைக்ளோசன், குடல் அழற்சியை ஊக்குவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சர்வதேச ஆய்வு குழு கண்டுபிடிப்பு
டூத் பேஸ்ட்டில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு கலவையான ட்ரைக்ளோசன் எவ்வாறு குடல் அழற்சியை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு நிரூபித்துள்ளது.
சாப்பல் ஹில்லில் உள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தலைமையிலான இந்த ஆய்வு குறித்து சமீபத்தில் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டது.
புதிய ஆய்வில் ட்ரைக்ளோசன் சில நொதிகளின் உதவியுடன் குடலில் அழிவை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டது.
இதில் விஞ்ஞானிகள் குடல் நுண்ணுயிர் பீட்டா-குளுகுரோனிடேஸ் (GUS) புரதங்கள் போன்ற சில குடல் நுண்ணுயிர் நொதிகளை ட்ரைக்ளோசனுடன் இணைத்து, இந்த கலவை குடலில் எவ்வாறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபித்துக் காட்டினர்.
அதோடு எந்த பாக்டீரியா புரதங்கள் குற்றவாளிகள் என்பதை அறிந்ததால், நுண்ணுயிர்-இலக்கு தடுப்பானைப் பயன்படுத்தி குடலில் ட்ரைக்ளோசனின் செயல்முறையை ஆராய்ச்சியாளர்கள் தடுத்தனர்.
எலிகளில் செயல்முறையைத் தடுப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் பெருங்குடல் சேதம் மற்றும் பெருங்குடல் அழற்சியின் அறிகுறிகளைத் தடுத்தனர்.
இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவை ஏனெனில், இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் ஆய்வாளர்கள் குடல் அழற்சி நோயால் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையை எப்படி நிர்வகிக்கலாம் என்பதற்கான சில யோசனைகளை பரிந்துக்கின்றனர்.
இறுதியாக குடல் ஆரோக்கியத்தில் சுற்றுச்சூழல் இரசாயனங்களின் தாக்கம் குறித்து ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொள்வது முக்கியம் என்பதையும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.