தாயின் கஷ்டம் போக்க விடுமுறையில் கடலை விற்கும் 7 வயது மகன்...!
தாயின் கஷ்டம் போக்க விடுமுறையில் கடலை விற்கும் 7 வயது சிறுவனால் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தாய்க்காக கடலை விற்கும் 7 வயது மகன்
திருவாரூரைச் சேர்ந்தவர் சத்யா. இவருடைய கணவர் யுவராஜ். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஆனால், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகளும், 7 மற்றும் ஒன்றரை வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவனை பிரிந்த சத்யா தன் தாயுடனுடன் இருந்து குழந்தைகளை பராமரித்து வருகிறார். வறுமை காரணமாக சத்யா பூ வியாபாரம் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மகள் பத்மாவும், 7 வயது சிறுவன் சாய்சரண் தாய்க்கு உதவியாக கடலை விற்று வருகின்றனர். திருவாரூர் தியாகராஜ சுவாமி தெப்ப திருவிழாயையொட்டி, கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் 7 வயது சிறுவன் கவனம் பெற்றுள்ளான். தன் தாய் வறுமையை போக்குவதற்காக குழந்தைகளுடன் விளையாடும் வயதில் சாய்சரண் கடலை விற்று வியாபாரம் செய்து வருகிறான்.
இது குறித்து சாய் சரண் கூறுகையில்,
எனக்கு மற்ற குழந்தைகள் போல் விளையாட வேண்டும் ஆசை உள்ளது. ஆனால், எங்க அம்மா கஷ்டப்படுகிறார்கள். அம்மாவுக்காகத்தான் நான் கடலை விற்கிறேன். விற்று வரும் பணத்தை என் அம்மாகிட்ட கொண்டு போய் கொடுத்துவிடுவேன். எனக்கு செயின், கையில் காப்பு போட வேண்டும் என்று ஆசை. நன்கு படித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே என் ஆசை என்று தெரிவித்துள்ளான்.
தற்போது இச்சிறுவனின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தங்கமகன் இவன்... நிச்சயம் வருங்காலத்தில் நல்ல நிலைக்கு வருவான் இந்தத் தங்கம்.. என்று சாய்சரணை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.