திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையை நினைவிருக்கா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்த நடிகை மல்லிகா ஆள் அடையாளமே தெரியாதளவுக்கு மாறியுள்ள தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருப்பாச்சி
நடிகர் விஜயின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் திருப்பாச்சி. இப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
திருப்பாச்சி படத்தின் மூலம் தான் இயக்குனர் பேரரசு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியான இப்படம் கில்லி படத்திற்கு பிறகு, விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இந்த திரைப்படத்தில் பலரது வரவேற்பையும் பெற்ற கதாபாதத்திரமான மல்லிகாவின் தங்கை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மல்லிகா. தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்த படத்தில் இவர் விஜயுடன் சேர்ந்து செய்யும் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றது. திருமணத்தின் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கும் மல்லிகாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள்.
இந்நிலையில், நடிகை மல்லிகா குடும்பத்துடன் இருக்கும் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதைப்பார்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |