தாலியில் ஊக்கு மாட்டி வைப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகின்றபோது தாலி என்பது அந்த திருமண வாழ்க்கையின் ஆதாரமாக அமைகிறது.
புனிதமான கணவன் மனைவி பந்தத்தை தாலியே உறுதிப்படுத்துகிறது. திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளைக் கொண்டே மாங்கல்யம் அணிவிக்கப்படுகிறது.
இந்த ஒன்பது இழைகளும், வாழ்க்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிப்பதாக நம்பப்படுகின்றது. பெண்களின் ஆதாரமாக விளங்கம் தாலியில் சில பெண்கள் ஊக்கு அணிந்திருப்பார்கள்.
இந்த ஊக்கு அணிவதால் உண்டாகும் பிரச்சனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமாங்கல்யம்
இந்த திருமாங்கல்யம் கணவனுக்காக பெண்கள் அணிவதாகும். கணவன் மனைவியுடன் இல்லாத நேரத்தில் பெரியவர்கள் ஆசீர்வதித்து அந்த தாலியில் குங்குமம் வைத்தால் கணவனுக்கு நல்லது நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.
இதனால் கணவனின் மன்னேற்றத்தை தடை செய்யும் வகையில் எதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதை விரட்ட இந்த திருமாங்கல்யம் பயன்படும்.
எனவே தான் இந்த திருமாங்கல்ய கயிற்றை எப்போதும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக வைத்து கொள்ளவது நல்லது.
பெண்கள் தினமும் குளிக்கும் போது தாலிக்கயிற்றில் மஞ்சள் தேய்த்து குளித்தால் தாலிக்கயிற்றை எப்போதும் மஞ்சள் நிறமாக வைத்து கொள்ளலாம்.
தங்க தாலியில் மஞ்சள் தேய்க்க தேவைில்லை. கணவனின் முன்னனேற்ற விஷயத்தில் தடையாக இருக்கும் விஷயங்களை விரட்ட பெண்கள் வெள்ளிக்கிழமையன்று மாங்கல்யத்திற்கு பூ வைத்து வணங்கினால் அது விசேஷ பலன்களை தரும்.
தாலியில் இருக்கும் மஞ்சள் கயிற்றை நாம் நினைத்த நேரங்களில் மாற்ற கூடாது. வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே மாற்ற வேண்டும்.
இந்த நிகழ்வை திங்கள் அல்லது செவ்வாயில் செய்யலாம். ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிற்றை மாற்றினால் கணவருக்கு நீண்ட அயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
திருமாங்கல்யத்தை கடவுளுக்கு காணிக்கயைாக செலுத்தக்கூடாது. இரும்பினால் ஆக்கப்பட்டிருக்கும் எந்த பொருட்களையும் தாலியுடன் சேர்த்து அணிய கூடாது.
இதற்கான காரணம் இரும்பு சனிபகவான் பார்வை பட்ட ஒரு உலோகம் ஆகும். இது எதிர்மறை ஆற்றலை தருவதால் கணவனின் வருமானத்தையும் தடை செய்யும் என்று நம்பப்படுகிறது.
அதனால் தான் தாலியில் ஊக்கு மாட்ட கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இந்த உலோகம் தங்கத்திற்கு கேடு விளைவிக்கும்.