குளிக்கும் முன் நாம் விடும் தவறுகள்.. இனி அப்படி செய்யாதீங்க!
பொதுவாக காலையில் தினமும் குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.
குளிக்கும் பொழுது சிலர் தண்ணீரை உடம்பில் ஊற்றிக் கொண்டு சரியாக 5 - 10 நிமிடங்களில் குளித்து விடுவார்கள்.
ஆனால் இது உடலுக்கு ஆரோக்கியம் தராது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் குளிப்பதற்கும் அதனை துடைப்பதற்கும் சில முறைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
குளிப்பதற்கான படிமுறைகள்
Image - verywellhealth
1. குளிப்பதற்கு முன்னர் தலையில் கொஞ்சமாக எண்ணெய் வைத்து விட்டு குளிக்க வேண்டும். காய்ந்த தலையுடன் குளித்தால் அது உடலுக்கு நல்லதல்ல என்பார்கள்.
2. ஒரு ஒரு டம்ளர் தண்ணீரில் ஷாம்புவை ஊற்றி கலக்கிய பின்னர் தலைமுடிக்கு அப்ளை செய்ய வேண்டும்.
3. முதலில் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசி விட்டு கடைசியாக குளிர்ந்த நீர் ஊற்றி கழுவிக்கொள்வது நல்லது.
4. தலையை கழுவும் போது முடியை கீழ்நோக்கி வைத்துக்கொண்டு கழுவ வேண்டும். நேராக தலையில் தண்ணீர் கொட்டும் போது தலைமுடி உதிர்வாதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
5. ஈரமான முடியை தலையில் உச்சியில் வருமாறு துண்டை கட்டிக்கொள்ள வேண்டும். பின்னால் கொண்டையாக முடியை சுற்றக்கூடாது. 6. ஈர முடியை துண்டால் அடித்து துவட்டாமல் கை விரல்களால் பிரித்து சிக்கெடுத்து உலர்த்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |