திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் கண்டிப்பாக இத செய்யணும்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பெண்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டாலே போதும்.
முகத்தில் ஒருவித பூரிப்பு குடிகொள்ளும் அதை தான் பலரும் 'கல்யாணக் களை' வந்துவிட்டதாக கூறுவார்கள்.
அந்த பூரிப்பு மணமேடையில் தாலி கட்டும் வரை இருக்க வேண்டும்.
அந்த வகையில் கல்யாணக் களையை எப்படி அவ்வளவு நாள் நீடிக்க செய்வது? கட்டுடல் தோற்றத்தில் எப்படி பிரகாசிப்பது? என்பதற்கான குறிப்புக்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மணப்பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
1. திருமண நாள் நெருங்கும் போது உற்சாகம் அதிகரிக்கும். முகத்தில் ஒரு விதமான பொலிவு இருந்து கொண்டே இருக்கும். இதனை தக்க வைத்து கொள்ள நீர்ச்சத்து அவசியம். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். அத்துடன் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியாக செரிமானம் சீராகும்.
2. வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகள், நொறுக்குத்தீனி என்பவற்றை சாப்பிடுவதை குறைக்கவும். சாப்பிடுவதற்கு பெரிய பெரிய தட்டுக்களை பயன்படுத்துவதை தவிர்த்து சிறிய கிண்ணங்களை பயன்படுத்துவது சிறந்தது. இது உங்கள் சாப்பாட்டின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
3. தினசரி உணவில் பாதாம் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலுள்ள கொழுப்புகள், புரதம், ஆன்டி ஆக்சிடென்டுகள் உட்பட 15 அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் குடிப்பதால் பசி இருக்காது. அளவாக சாப்பிட முடியும்.
4. உடலுக்குத் தேவையான ஓய்வு அவசியம். தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். போதுமான நேரம் தூங்கும் பொழுது அதிலும் ஒரு வகையான மாற்றம் இருக்கும். அத்துடன் மன அழுத்தும் பிரச்சினையை குறைத்து கொள்ளுங்கள். எதை பற்றியும் சிந்திக்காமல் இருப்பது நல்லது.
5. உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இலக்குகளை அடைவதற்கு நிதானம், பொறுமை கண்டிப்பாக இருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
6. சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பலகாரங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனின் இது எடை அதிகரிப்பு மற்றும் சரும பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |