திருநங்கையிடம் இந்த பொருட்களை வாங்கி பாருங்க - அடுத்த கோடீஸ்வரர் நீங்க தான்
திருநங்கை எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்பவர்கள் தான் திருநங்கைகள்.
இவர்கள் சமூகத்தில் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதுடன் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
இது அவர்களின் தவறு ஒன்றும் இல்லை. பிறப்புறுப்பில் ஆணாகவும் குணத்தில் பெண்ணாகவும் வாழ்வார்கள். இது குழந்தை கருவில் இருந்து உருவாகும் போது வரக்கூடிய ஒரு மரபணு பிழையாகும்.
இதனால் தான் குழந்தைகள் ஆண் இல்லாமலும் பெண்ணாக இல்லாமலும் நடு இனமாக பிறக்கின்றனர்.
இந்த பதிவில் ஜோதிடப்படி திருநங்கைகளிடம் இருந்து சில பொருட்களை வாங்கும் போது அது நமக்கு செல்வத்தை கொடுக்கும் என கூறப்படுகின்றது இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
திருநங்கைகள்
திருநங்கைளை பார்த்தால் சமூகத்தில் அனைவரும் கிண்டலும் கேலியும் செய்வது தான் வழக்கம். ஆனால் நமது இந்து மதப்படி திருநங்கைகள் அர்தனாதீஸ்வரராக மதிக்கப்படுகிறார்கள்.
இவர்களிடம் இருந்து கிடைக்கும் ஆசீர்வாதம் நம்மை வாழ்க்கையின் செல்வத்தின் உச்சிநிலைக்கு கொண்டு செல்லும். இந்த திருநங்கை ஆசீர்வாதம் நம்மை கோடீஸ்வரனாக மாற்றும் என்பது ஜோதிடம் மூலம் அறியப்படும் நம்பிக்கையாகும்.
இது தவிர திருநங்கையிடம் ஒரு நாணயத்தை வாங்கி அதை செலவு செய்யாமல் அப்படியே வைத்துக்கொண்டால் நம்மிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்குமாம்.
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றி கொள்ள நினைத்தால் ஒரு வெள்ளை பேப்பரில் எதிரியின் முழுப்பெயரை எழுதி அதை சுருட்டி அதனுடன் ஒரு நாணயத்தை சேர்த்து திருநங்கைகளிடம் கொடுத்து அவர்கள் அதை வாங்கிவிட்டால் உங்கள் எதிரி கூட சிறுது நாட்களில் உங்களுடன் நண்பர்களாக பழகுவார்கள் என கூறப்படுகின்றது.
இது தவிர குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெற திருநங்கைகளிடம் குழந்தை பொம்மை அதனுடன் பணம் வைத்து கொடுத்து அதை அவர்கள் மறுக்காமல் வாங்கி கொண்டால் உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் வரும்.
திருநங்கைகளை பார்த்தவுடன் கேலி கிண்டல் செய்யாமல் இதுபோன்ற விடயங்கை செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிடப்படி நம்பப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |