குரு வக்ரமாவதால் நவம்பர் வரை இந்த 4 ராசிக்கும் ஆபத்து! யார் யாரெல்லாம் பாதாள குழியில் விழப்போவது?
குரு அனைத்து மக்களின் வாழ்விலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
அதுவும் குரு ஒரு ராசியில் வக்ரமாகும் போது, அது தொழில் மற்றும் நிதியை பாதிப்பதோடு, சிலரின் திருமண வாழ்க்கையையும் மோசமாக பாதிக்கிறது. இந்நிலையில் 2022 ஜூலை 29 ஆம் தேதி மீன ராசியில் வக்ரமாகிறார்.
குருவின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 4 ராசிகளில் அதன் தாக்கம் சற்று மோசமானதாக இருக்கும்.
இப்போது ஜூலை 29 அன்று குரு வக்ரமாவதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
தொழில் ரீதியாக பல சவால்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை பாதிக்கப்படும். தம்பதிகளுக்குள் பரஸ்பர ஒற்றுமையின்மை காரணமாக சண்டைகள் அதிகரிக்கும். சரியான தொடர்பு இல்லாததால் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும். வாழ்க்கைத் துணையுடன் ஈகோ பிரச்சனை அதிகரிக்கும்.
பரிகாரம் - குருவின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க, வியாழக்கிழமைகளில் குருவை தவறாமல் வழிபடுங்கள்.
சிம்மம்
குரு வக்ர காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கலாம். குறிப்பாக திருமண வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
பரிகாரம் - குரு வக்ர பெயர்ச்சியின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க 'ஓம் குருவே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்கவும்.
கன்னி
திருமண வாழ்க்கையில் உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் இக்காலத்தில் உங்கள் ஈகோ அதிகரிக்கும். நிதி பிரச்சனைகள் காரணமாக, துணையுடனான உறவில் விரிசல் ஏற்படலாம்.
பரிகாரம் - ஓம் நம சிவாய' என்னும் மந்திரத்தை தினமும் உச்சரித்தால், குருவின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்கலாம்.
துலாம்
குரு அசுப பலன்களைத் தருவார். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம். இது பரஸ்பர புரிதல் இல்லாததால் இருக்கலாம். எனவே பாதகமான சூழ்நிலை ஏற்படும் போது கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம் - 'ஓம் பிருஹஸ்பதயே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்ல வேண்டும்.
குரு தோஷத்திற்கான பரிகாரம்
குருவினால் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவும் சில பரிகாரங்கள் உள்ளன.
- வியாழக்கிழமைகளில் வெல்லம் மற்றும் பருப்பை தானம் செய்யவும்.
- புஷ்பராகம் மோதிரத்தை ஆள்காட்டி விரலில் அணிவது நல்லது.
- அதுவும் இந்த மோதிரத்தை வியாழக்கிழமைகளில் அணியுங்கள்.
- விஷ்ணு பகவானை வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை சொல்லவும்.
- பரமேஷ்வரரை வணங்கி சிவலிங்கத்திற்கு தினமும் நெய் தீபம் ஏற்றுங்கள்.
- இது குருவின் தீய விளைவுகளை சமாளிக்க சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
- ஏழைகளுக்கு உதவி, சமூக சேவைகளில் ஈடுபடுங்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.
- 'ஓம் க்ராம் கிரீம் க்ரோம் சஹ குருவே நமஹ' என்ற குரு மந்திரத்தை தினமும் 28 அல்லது 108 முறை சொல்லுங்கள்.