6 கோடி ரூபாய் நகையை திருடிய கும்பல்! 100 ரூபாயில் சிக்கிக்கொண்ட சம்பவம்
டெல்லியில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய கும்பல் வெறும் 100 ரூபாயால் சிக்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
வழிமறித்த நபர்
டெல்லியில் பஹார்கஞ்ச் பகுதியை சேர்ந்த இருவரை கடந்த புதன்கிழமை போலீஸ் உடையில் இருந்த நபர் ஒருவர் வழிமறித்திருக்கிறார்.
டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த இருவரும் காவல்துறை அதிகாரி என நினைத்து அவரது கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கின்றனர்.
டெலிவரி செய்யும் நபர்களிடம் இருந்த பார்சலில் என்ன இருக்கின்றது என்று கேட்டு திறக்க முயன்றுள்ளார் பொலிஸ் ஆடை அணிந்திருந்த நபர்.
இத்தருணத்தில் அங்கு வந்த மற்றொரு நபர் பார்சலை கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிய நிலையில், அவர்கள் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அங்கிருந்து பார்சலுடன் எஸ்கேப் ஆகியுள்ளனர்.

100 ரூபாயில் சிக்கியது எ்பபடி?
இதனையடுத்து டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் இருவரும் இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய துவங்கினர். சுமார் 7 நாட்களுக்கு இந்த பணி நீடித்திருக்கிறது.
அப்போது சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்ததை போலீசார் கண்டறிந்த நிலையில், அவர்களிடம் ஒரு டாக்ஸி சாரதியிடம் பேசுவதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த டாக்சி டிரைவரிடம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு அவருக்கு பேடிஎம் மூலமாக அந்த இளைஞர் பணத்தை டிரான்ஸ்பர் செய்தது தெரிய வந்திருக்கிறது.
டீ குடிப்பதற்காக இந்த தொகையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். இதன்மூலம், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து 6,270 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
கோடி கணக்கில் மதிப்புடைய பொருட்களை திருடிய கும்பல் இறுதியில் 100 ரூபாய் பணப்பரிவர்த்தனை மூலமாக காவல் துறையில் சிக்கிய சம்பவம் உள்ளூர் மக்களை வியப்படைய செய்திருக்கிறது.
