உயிரே போனாலும் இந்த 3 ராசியினர் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டாங்களாம்... உங்க ராசி என்ன?
பொதுவாகவே மனிதர்கள் தவறு செய்வதும், செய்த தவறை உணர்ந்த பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பதும் இயல்பான விடயம். யாரையும் மனதளவில் கூட காயப்படுத்தாமல் வாழ்பவர்கள் மிக மிக அரிது.
ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்தாலும் கூட மற்றவர்களிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார்களாம்.
அப்படி எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்பதை விரும்பாத அகங்கார குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த சிம்ம ராசியினர் இயல்பாகவே தலைமைத்துவ ஆற்றல்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில், எப்போதும் உறுதி கொண்ட அவர்கள் தாங்கள் தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்பதை விரும்பவே மாட்டார்கள்.
அவர்களின் கவர்ச்சியும் அரவணைப்பும் அவர்களை நேசிக்கத்தக்கவர்களாக மாற்றினாலும், அவர்களின் ஈகோ பெரும்பாலும் அவர்கள் தவறுகளை ஒப்புக்கொள்வதைத் தடுக்கிறது.
மேஷம்
ராசிசக்கரத்திக் அதிபதியாக திகழும் மேஷம், துணிச்சலான, மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த ராசிகளில் ஒன்றாக அறியப்படுகின்றது.
இவர்களின் அதீத ஆர்வம் காரணமாக அவர்கள் முதலில் செயல்பட முனைகிறார்கள், பின்னர் சிந்திக்கிறார்கள், இது மோதல்களுக்கு வழிவகுக்கும். ஆனால் மன்னிப்பு கேட்கும் விஷயத்தில் எப்போதும் பின்வாங்கிவிடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்களின் பார்வையில், மன்னிப்பு தேவையற்றதாகக் கருதப்படுகின்றது.மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் பெரும்பாலும் தங்கள் நடத்தையை மீண்டும் சாதாரணமாக மாற்றிக்கொள்கின்றார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்களின் தீவிரமான, மற்றும் மர்மமான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இவர்களிடம் நம்பமுடியாத பிடிவாத குணம் இருக்கும். இவர்கள் செய்யும் அனைத்தும் சரியாக இருக்கும் என்ற அகங்காரம் இருவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
அதனால், மன்னிப்பு கேட்பது என்பது தங்களை உணர்ச்சி ரீதியாக பாதிப்பதாக இவர்கள் உணருவார்கள். மேலும் விருச்சிக ராசிக்காரர்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க விரும்புகிறார்கள். இதனால் மன்னிப்பு இவர்களின் அதிகாரத்தை குறைக்கும் என்ற பிரம்மை இவர்களிடம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |