மகர ராசியில் ராகு... 18 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் மாற்றம்! அதிர்ஷ்டத்தில் 3 ராசியினர்
Rahu Transit in Capricorn: ஜோதிடத்தில் நிழல் கிரகமான ராகுவின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தினை பெறும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
ராகு பெயர்ச்சி
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகுவிற்கு தனி ராகி கிடையாது. ஒரு ராசியில் 18 மாதங்கள் இருப்பதுடன், எப்பொழுதும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கக்கூடியவராக இருக்கின்றார்.
ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பதால் ராசிகளுக்குள் சிறு மாற்றமும் ஏற்படும். அந்த வகையில் கும்ப ராசியில் பயணித்து வரும் ராகு 18மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் தனது ராசியினை மாற்றுகின்றார்.
மகர ராசிக்கு பெயர்ச்சியடையும் நிலையில், மூன்று ராசியினர் தொழில், பணம் விடயங்களில் உச்சத்தில் இருக்கின்றனர். அவை எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
ராகு பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருப்பதுடன், அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல வாய்ப்பினை அளிக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய நட்புகளால் நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதுடன், புதிய வருமான ஆதாரமும் உருவாகி, நிதி நிலையும் மேம்படுகின்றது.

தனுசு
தனுசு ராசியினருக்கு ராகு பெயர்ச்சியினால் நல்லதொரு மாற்றம் ஏற்படுவதுடன், திடீரென நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீண்ட கால கடின உழைப்பிற்கு ஏற்ப பலன் கிடைப்பதுடன், பணியிடங்களில் உங்களது செயல்திறனுக்கு பாராட்டும் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் மற்றும் புதிய ஒப்பந்தம் கிடைக்குமாம்.
வணிகத்தில் இருப்பவர்கள் விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகளும் கிடைப்பதுடன், முதலீடு தொடர்பான முடிவு எடுப்பதில் கவனமாக இருக்கவும்.

கும்பம்
ராகு பெயர்ச்சியினால் கும்ப ராசியினருக்கு தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும் செய்கின்றது.
வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் ராகுவால் நல்ல செய்தியினை பெற வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேர்வதுடன், நிலுவையில் உள்ள வேலைகளையும் வெற்றிகரமாக முடிவடையுமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |