புத்தாண்டில் சுக்கிரனால் உருவாகிய ராஜயோகம்: 3 ராசிக்கு பணம் பெருகுமாம்
சுக்கிரனால் உருவாகிய ராஜயோகத்தினால் அதிர்ஷ்டத்தையும், பண வரவையும் பெறும் ராசிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுக்கிரனின் ராஜயோகம்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கான காரணியாக இருக்கின்றார்.
சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான நிலையில், மேஷ ராசியில் பயணித்து வருகின்றார். இன்று தமிழ் புத்தாண்டு தினத்தில், சுக்கிரன் வருணனுடன் சேர்ந்து அர்த்த கேந்திர ராஜயோகத்தினை உருவாக்க உள்ளார்.
வருணன் மீன ராசியில் பயணித்து வரும் நிலையில், அர்த்த கோத்திர யோகம் உருவாகுவதால் சிறப்பான பலன்களை சில ராசியினர் பெறுகின்றனர். அவர்கள் யார் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
அர்த்த கேந்திர யோகத்தினால் மேஷ ராசியினருக்கு பல வழிகளில் சிறப்பான பலன் கிடைப்பதுடன், நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும்.
கடன உழைப்பிற்கு பலன் கிடைப்பதுடன், சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், புத்திசாலித்தனத்தினால் பல வேலைகளையும் சிறப்பாக முடிப்பீர்கள்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த யோகத்தினால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைப்பதுடன், தொழிலில் மகத்தான வெற்றியையும் பெறுவீர்கள். வேலையில் மாற்றத்தினை காண்பதுடன், முன்னேற்றத்தினையும் பெறுவீர்கள்.
பணியிடத்தில் பதவி மற்றும் சம்பள உணர்வு கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருப்பதுடன், வராமல் இருந்த பணமும் வந்துசேரும். திருமண வாழ்க்கை இனிதாக இருப்பதுடன், திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

ரிஷபம்
அர்த்த கேந்திர யோகத்தினால் ரிஷப ராசியினருக்கு தேவையற்ற செலவுகள் குறைவதுடன், பயணிகள் அதிகரித்து, அதனால் நிதி ஆதாயம் கிடைக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.
முக்கியமாக பண பிரச்சனை தீர்ந்து கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
ஆன்மீகத்தில் அதிக விருப்பம் ஏற்படுவதுடன், குடும்பத்தினருடன் நேரத்தினையும் செலவழிப்பீர்கள். சோம்பலை தவிர்க்கவில்லையெனில், நிதி இழப்பு, பிற பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |