பணம் சம்பாதிப்பதில் கில்லாடியாக இருக்கும் 5 ராசிகள்
Money Earnings Zodiac Signs: பணம் சம்பாதிப்பதிலும், தான் சம்பாதித்த பணத்தினை இன்னும் பல மடங்கு பெருக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதற்கு என்று ஒரு யோசனை வைத்திருப்பார்கள். அவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கு ஏற்ற திறமை மட்டும் ஒருவரிடம் இருந்தால் போதாது.
கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை எவ்வாறு திட்டமிட்டு சேமிப்பது, செலவழிப்பது என தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதித்தாலும் அதனை சேமிக்க தெரியாமல் செலவழித்துக் கொண்டிருப்பார்கள்.

சிலர் குறைவான சம்பளம் பெற்றாலும் அதிலும் புத்திசாலித்தனமாக பணத்தினை சேர்த்து வைப்பதும், அதனை பல மடங்காக மாற்றுவதுமாக இருப்பார்கள்.
ஒருவரது நிதி சார்ந்த குணங்கள், செலவு செய்யும் பழக்கம், பணத்தினை நிர்வகிக்கும் திறன் இதற்கும் ராசிக்கும் தொடர்பு உள்ளது. அந்த வகையில் மிகவும் புத்திசாலித்தனமாக பணத்தினை சம்பாதித்து, அதனை பல மடங்கு பெருக்கும் ராசியினரை தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதியாக செவ்வாய் இருக்கும் நிலையில், இந்த ராசியினர் எந்தவொரு செயலையும், ஆழமாக ஆராய்ந்து செயல்படுவார்கள்.
பணத்தினை சம்பாதிப்பது மட்டுமல்லாமல் அதனை எவ்வாறு சேர்த்து வைப்பது, பல மடங்காக மாற்றுவது என்பதை ஆர்வத்துடன் செயல்படுவார்கள்.
முதலீடு செய்வதற்கு பல விடயங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதுடன், சுற்றியுள்ளவர்களின் செயல்பாடு, சூழ்நிலை இவற்றினை கூர்ந்து கவனிக்கும் திறனையும் கொண்டுள்ளனர்.

மகரம்
சனி பகவானை அதிபதியாக கொண்டுள்ள மகர ராசியினர் எந்தவொரு செயலையும் திட்டமிட்டு செய்வதில் ஆர்வமாக இருப்பார்கள். மேலும் ஒரு விடயத்தினை தொடங்கும் போது எதிர்காலத்தில் உள்ள பயனையும் சிந்திப்பார்கள்.
தொழில் வளர்ச்சி, வருமானம், பொருளாதார நிலைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். பண விடயத்தில் இளம் வயதிலேயே முதிர்ச்சியான சிந்தனையை கொண்டிருப்பார்கள்.
கடின உழைப்பு, விடா முயற்சி, சரியாக திட்டமிடுவது இதன் மூலமாக செல்வத்தை பெருக்குவதுடன், நீண்ட கால இலக்கினை மனதில் வைத்துக் கொண்டு தான் தொழில் அல்லது வேலை செய்யும் இடத்தில் செயல்படுவார்கள்.

ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக வைத்திருக்கும் ரிஷப ராசியினர் பொறுமை மற்றும் நடைமுறை சிந்தனை, உறுதியான முடிவு எடுப்பதில் சிறந்தவர்கள்.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் துளியும் இருக்காது. ஆனால் எதிர்காலத்தில் நிலையான வருமானத்திற்கு கொடுக்கும் அடித்தளத்தினை உருவாக்குவதில் சிறந்தவராக இருப்பார்கள்.
மேலும் பணத்தை எவ்வாறு சேமிக்கவும், முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக செயல்படுவதுடன், பணத்தை வீணாக செலவழிக்கவும் மாட்டார்கள். சிறுக சிறுக சேமித்து சொத்துக்களை சேர்ப்பார்கள்.

கன்னி
புதன் கிரகத்தினை அதிபதியாக கொண்டுள்ள கன்னி ராசியினர் எதையும் துல்லியமாக செய்ய விரும்புவதுடன், சிறிய விடயத்தை கூட ஆராய்ந்து முடிவெடுப்பதில் சிறந்தவர்கள்.
தொழில் மற்றும் பணம் தொடர்பான விடயங்களில் தெளிவான இலக்கு வைத்திருப்பதுடன், இலக்கை அடைவதற்கு தொடர்ந்து உழைக்கவும் செய்வார்கள்.
ஒரே நாளில் அதிகமான பணத்தினை சம்பாதிக்க நினைக்காமல் சிறிய முன்னேற்றத்தின் மூலமாக படிப்படியாக வளர்ச்சி அடைவார்கள்.

துலாம்
சுக்கிரனை அதிபதியாக வைத்திருக்கும் துலாம் ராசியினர் மற்றவர்களுடன் எளிதில் பழகும் தன்மை கொண்டவராகவும், உறவுகளை உருவாக்குவதில் திறமையானவராகவும் இருப்பார்கள்.
இவர்களின் ராஜதந்திரமான அணுகுமுறை தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதுடன், முக்கியமாக இந்த ராசியினர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஓடாமல் தங்களுக்கு பிடித்த துறையில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |