ராகு பெயர்ச்சியால் 18 மாதங்களுக்கு அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார்?
Raghu Peyarchi: ராகு பெயர்ச்சியால் 18 ஆண்டுகள் கழித்து ஜாக்பாட்டை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகு பெயர்ச்சி
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேது இவற்றின் பெயர்ச்சி முக்கியமாக பார்க்கப்படுகின்றது. பஞ்சாங்கத்தின் படி இன்று ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
இந்த பெயர்ச்சியினால் அடுத்த 18 மாதங்களுக்கு சில ராசியினரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லை குறைந்து மகிழ்ச்சியாக சில ராசியினர் காணப்படுவார்கள்.

மேலும் ராகுவின் சாதகமான நிலை ஒருவருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையையும் பெறுகின்றது.
சில தருணங்களில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கையாக செயல்படும் சூழ்நிலையும் உருவாகும் என்று கூறப்படுகின்றது.
தற்போது இந்த பெயர்ச்சியினால் அதிஷ்டத்தினை பெரும் சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு அதிகமான நற்பலன்கள் கிடைக்கும் நிலையில், ராகு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். இதனால் எதிரிகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்குமாம்.
நீண்ட நாட்களாக எதிராக செயல்பட்டு வருபவர்கள் விலகி செல்வதுடன், சில தருணங்களில் அவர்களே ஆதரவாகவும் மாறுவார்கள்.
பல நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் போட்டி, பொறாமை என்று சந்தித்தவர்களுக்கு தற்போது சாதகமான சூழ்நிலை ஏற்படலாம். அதுமட்டுமின்றி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகவும் முடிய வாய்ப்புள்ளது.
பொருளாதார ரீதியாகவும் சாதகமான பலனை பெறுவதுடன், வருமானம் அதிகரிப்பதுடன், நிலுவையில் உள்ள பணம் கைக்கு வரவும், புதிய வருமான வாய்ப்புகளும் கிடைக்கும்.
உடல்நலத்தில் ஏற்பட்ட கவலைகள் மாறுவதுடன், உடல்நல பிரச்சனைக்கு சிகிச்சை மற்றும் தீர்வுகளை பெற வாய்ப்பு கிடைக்கும். ஆக மொத்தம் அடுத்த 18 மாதங்களுக்கு சிம்ம ராசியினருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கும் ராகுவால், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்குமாம். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையுமாம்.
திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சி கைகூடுவதுடன், ஏற்கனவே திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் நல்ல புரிதலோடு காணப்படுவார்கள்.

புதிய நட்புகள் கிடைப்பதுடன், உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உறவு மேம்படுவதுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைப்பதுடன், நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றியாக முடியும். எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்குமாம்.
சிலருக்கு நீண்ட நாள் கனவு நனவாகும் சூழல் இருப்பதுடன், உங்களுடைய எதிர்கால திட்டம் மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சியினை அனைவரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.
மீனம்
ராகு பெயர்ச்சி மீன ராசியில் பதினோறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வருமானம், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் வாய்ப்பு இருக்கும்.
திருமண வாழ்க்கைக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையுமாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் கைகூடும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன், உங்களுடைய திறமைகளுக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைப்பதுடன், ஏற்கனவே செய்துவரும் தொழிலுடன், புதிய தொழில் தொடங்கும் சாதகமாக சூழலும் உருவாகும்.
வருமானத்தினை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் கிடைப்பதுடன், எதிர்பாராத பணவரவு, பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |