2027 சுக்கிரன் பெயர்ச்சி... ராஜயோகத்தினை பெறும் ராசியினர் யார் யார்?
சுக்கிரன் பெயர்ச்சி 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் நிலையில், ராஜயோகத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் மங்களகரமான மற்றும் மென்மையாக கிரகம் என்று அழைக்கப்படும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாகும்.
தற்போது சுக்கிரன் துலாம் ராசியில் புதனுடன் இணைந்துள்ளது. திருமண வாழ்வில் மகிழ்ச்சிக்கும், நிதி செழிப்பிற்கு்ம் காரணமாக இருக்கின்றது.
சுக்கிரனின் நிலை மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் முக்கிய மாற்றத்தினை கொடுக்கின்றது. 2027ம் ஆண்டில் 1ம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடையும் நிலையில், ஜனவரி 29 வரை விருச்சிக ராசியில் நிலைத்திருக்குமாம்.
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் இருக்கும் நிலையில், சுக்கிரன் பெயர்ச்சியின் போது ராஜயோகத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
புத்தாண்டின் முதல் நாளில் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு மன அமைதி உண்டாகும். புத்தாண்டு முதல் நினைத்த காரியங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். நிதி ரீதியாக வலுப்பெறுவதற்கான நேரம். வீடு, குடும்பம் மற்றும் சொத்து தொடர்பான தகராறுகள் தீர்க்கப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறந்த புரிதல் உருவாகும் சிறு பயணங்கள் அதிக மகிழ்ச்சியைத் தரும். இந்த நேரத்தில் உங்களுக்கு வருமானம் பெருகும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சுக்கிரனின் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும். நினைத்த காரியங்களில் வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.

மேஷம்
புத்தாண்டின் முதல் நாளில் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். வேலை தொடர்பான பொறுப்புகளை நீங்கள் எளிதாகக் கையாள்வீர்கள். திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடிவடையும். உங்கள் உடல்நலம் அனைத்துப் பணிகளுக்கும் கைகொடுக்கும். குறிப்பாக சுக்கிரனின் அருளால், காதல் மற்றும் குடும்ப உறவுகளில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து செய்த முதலீட்டிலிருந்து லாபம் பெறுவீர்கள். கடந்த காலத்தில் கடன் பிரச்சனைகளைத் தீர்க்க நீங்கள் எடுத்த முயற்சிகள் இறுதியாக நிறைவேறும். மேலும், சுக்கிரனின் அருளால், வீடு, வாகனம் மற்றும் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மகரம்
புத்தாண்டின் முதல் நாளில் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு அமைதியைக் கொண்டுவரும். ஜனவரி மாதத்தில் நீங்கள் பெரும் நிதி ஆதாயங்களைக் காண்பீர்கள். கடின உழைப்பாளிகளின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். திருமண வாழ்விலும் தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும. தொழில் வாழ்க்கையில் காணப்படும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் நேரம் இது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். கணவன்-மனைவிக்கு இடையேயான பிரச்னை தீரும். உங்கள் கடின உழைப்பின் பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.

கன்னி
புத்தாண்டின் முதல் நாளில் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் உங்கள் கடின உழைப்பின் பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் உண்டாகும். மன அமைதி அதிகரிக்கும். ஜனவரி மாதத்தில் பழைய பிரச்சனைகள் தீர்க்கப்படும் ஒரு பொன்னான நேரத்தை நீங்கள் காண்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நீண்ட கால இலக்குகளைத் திட்டமிட இது ஒரு நல்ல நேரம். உயர்கல்வி தொடர்பான முன்னேற்றம், வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் மற்றும் புதிய அனுபவங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சுக்கிரன் வழிகாட்டுவார். புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு இந்தப் புத்தாண்டு மிகவும் சாதகமாக உள்ளது. உங்கள் வேலையிலிருந்து எதிர்பாராத பணம் வந்து சேரும். சுக்கிரனின் அருளால் உங்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |