ரிஷப ராசிக்கு செல்லும் செவ்வாய்...இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.
செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், ஆற்றல் இவற்றிற்கு காரண கிரகமாக இருக்கும் நிலையில், இன்று ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார்.
செவ்வாய் கிரகம் ரிஷப ராசியினுள் நுழைகின்றார். இந்த நேரத்தில் தைரியம், தன்னம்பிக்கை, பலம் என அனைத்தும் அதிகரிக்குமாம்.

இந்த செவ்வாய் பெயர்ச்சியினால்இந்த மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த அதிர்ஷ்டம் கிடைக்கும், என்ன பலன் அடைவார்கள் என்று இங்கு கீழே காணலாம்.
மேஷம்
செவ்வாயின் இந்த மாற்றத்தால் மேஷ ராசியினருக்கு இது நிறைய பலன்களை தருகிறது. இதனால் இவர்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மாற்றங்கள் வர வாய்ப்புகள் உள்ளது. உங்களின் ஆளுமை திறனால் நீங்கள் மரியாதை அடைவீர்கள். நீங்கள் செய்யும் வேலையில் நிறைய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது மட்டுமின்றி நீங்கள் செய்யும் வேலையால் உங்களுக்கு மன திருப்தி கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்படுவோரை நீங்கள் சுலபமாக வெல்ல முடியும். உங்களின் நிதி நிலைமை நீண்ட காலம் அமைதியாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த மாற்றத்தால் அவர்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய மாற்றம் கிடைக்கும். நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது உங்களுக்கு வெற்றியை தரும். மேலும் உங்கள் நிதி நிலைமை சீராக இருக்கும். நீங்கள் செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வேலையில் வெற்றி கிடைப்பதால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் திறமைக்கேற்ற பலன் கிடைக்கும். திருமண பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியும், அமைதியும் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சம்பளம் உயர்வு கிடைக்கும். உங்களுக்கு பல இடங்களில் இருந்து உதவிகள் வரும். இதனால் உங்கள் நிதி நிலைமை மாறும். நீங்கள் புதிய மனிதர்களை சந்திக்கிறதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த நபர்களால் உங்கள் வாழ்க்கை மாறும். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் புதிய இடத்தில் உங்கள் தொழில் நிறுவணத்தை துவங்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இந்த காலம் உங்களுக்கு லாபம் தரும் காலமாக உள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |