சூரியனின் இடமாற்றத்தால் ஏற்பட்ட ராஜயோகம்... 3 ராசியினருக்கு அடித்த யோகம்
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் உருவாகும் ராஜயோகம் குறித்தும் இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினரைக் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
சூரிய பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் என்பது முக்கியமாக பார்க்கப்படுகின்றது. கிரகங்களின் ராஜாவாகிய சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இவை கிரகங்களின் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் குரு பகவானுக்கும், சூரியனுக்கும் இடையே த்வித்வாதச யோகம் உருவாகுகின்றது.
இந்த யோகத்தின் தாக்கம் ஜுலை 15 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த யோகத்தினால் சில ராசியினருக்கு அதிர்ஷ்ட காலமாக இருக்கின்றது. அந்த வகையில் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினர் இந்த யோகத்தினால் நேர்மறையான மாற்றங்க்ள கிடைப்பதுடன், தொழில் வாழ்க்கையில் இதுவரை சந்தித்த தடைகள் முடிவிற்கும் வரும். பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி ஏற்படுவதுடன், பொருளாதார நிலையிலும் சிறப்பாக இருப்பார்கள்.
தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிப்பதுடன், வீட்டில் ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த யோகத்தினால் நேரடி பலன் கிடைப்பதுடன், நிதிநிலையில் முன்னேற்றம் கிடைக்கும். இதுவரை இருந்த கஷ்டங்கள் தீரும். வியாபாரத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அலுவலகத்தில் சிறப்பாக வேலை செய்து நன்மையை பெறுவீர்கள், வெளிநாடு செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவிற்கு வரும்.

மீனம்
மீன ராசியின் அதிபதியான குருபகவானுக்கும், சூரியனுக்கும் இடையே வரும் இந்த யோகத்தினால் மீன ராசியினர் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவார்கள்.
நேர்மறையான பலன்கள் இந்த காலத்தில் உருவாவதுடன், வேலை மற்றும் தொழிலில் மிகப்பெரிய வெற்றியையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படுவதுடன், வணிகர்கள் புதிய தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |