எந்தெந்த ராசியினர் எந்த ருத்ராட்சம் அணிய வேண்டும்?
எந்த ராசிக்காரர்கள் எந்த ருத்ராட்சம் அணியலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ருத்ராட்சம்
ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் கண்களில் இருந்து உருவானதாக கருதப்படுகிறது. மேலும் இது ஒரு மூலிகை மரமாகவும் கருதப்படுகிறது.
இது அணிவதால் நமக்கு மன மற்றும் உடல் நலம் சீராக இருக்கும் என நம்பப்படுகின்றது. இதை ஆண்கள், பெண்கள், சிறியோர், பெரியோர் என அனைவரும் அணிந்து வருகின்றனர்.
ருத்ராட்சத்தில் உள்ள கோடுகள் முகம் என்று சொல்லப்படுகிறது. ஐந்து கோடு என்றால் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் என்றும் 6 கோடு இருந்தால் ஆறு முகம் கொண்ட ருத்ராட்சம் என்று கூறப்படுகின்றது.
இவ்வாறு 1 முதல் 21 ருத்ராட்ச முகங்கள் காணப்படும் நிலையில், எந்தெந்த ராசியினர் எதை அணியலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு தைரியம், தன்னம்பிக்கை வெற்றி இவற்றினை அளிப்பதற்கு ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் மிகச்சிறந்ததாக பார்க்கப்படுகின்றது. இவர்கள் மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தினை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகின்றது.
ரிஷபம்
ரிஷப ராசியினர் நான்கு, ஆறு மற்றும் 14 முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது நன்மையாக பார்க்கப்படுகின்றது. ருத்ராட்சம் அதிர்ஷ்டம், வெற்றி, செல்வம், ஆரோக்கியம் இவற்றினை அளிப்பதுடன், மன அமைதி, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
கடகம்
மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவது கடக ராசியினருக்கு மிகவும் சிறந்ததாக பார்க்கப்படுகின்றது. இவை வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, வாழ்க்கை சிறப்பாக இருக்கவும், செல்வம், பதவி, புகழ் ஆகியவற்றினை தருவதுடன், அறிவு, ஞானம் ஆகியவற்றினையும் மேம்படுத்துமாம்.
தனுசு
இந்த ராசிக்காரர்களுக்கு ஒன்று, மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் நல்லது. ஏனென்றால் இது அவர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை, வெற்றி ஆகியவற்றை தருகிறது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் நான்கு ஆறு அல்லது பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும். அது அவர்களுக்கு சிவபெருமானின் அருளை கொடுக்கிறது. இது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது நல்லது. இது அவர்களுக்கு அமைதி மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ உதவுகிறது. மேலும் தொழில், வியாபாரம், கல்வி ஆகியவற்றில் வெற்றி கிடைக்க உதவுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |