தயவு செய்து இந்த 7 காய்கறிகளை கழுவாமல் சாப்பிடாதீங்க... ஏன்னு தெரியுமா?
கழுவாமால் சாப்பிடக்கூடாத காய்கறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதாவது நாம் உண்ணும் உணவு மாசுபடும் போது உடம்பிற்கு கேடு விளைவித்து, அது ஃபுட் பாய்சனாக மாறுகின்றது. இதற்கு முக்கிய காரணம் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களினால் ஏற்படுகின்றது.
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை சரியாக கழுவாமல் இருந்தாலும் இந்த தாக்கம் ஏற்படும்.
கழுவாமல் சாப்பிடக்கூடாத காய்கறிகள்
கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் சத்தானது என்றாலும், ஈக் கோலி, சால்மோ நிலா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் சரியாக கழுவாமல் சமைத்தால் ஃபுட் பாய்சன் ஏற்படும்.
தக்காளி, ஆப்பிள், பேரிக்காய், வெள்ளரிக்காய் போன்ற பழங்களின் மேல் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். இவற்றினை தோல் உரிக்கும் முன்பே நன்றாக கழுவியே சாப்பிட வேண்டும்.
இதே போன்று ஸ்ட்ராபெரிகள், ப்ளூபெர்ரிகள், ராஸ்பெரிகள் பழங்களில் பூச்சிக்கொல்லிகள், பாக்டீரியாக்கள் தோல் மீது இருக்கும். எனவே இவற்றினை நன்றாக கழுவி நன்கு உலர்த்திய பின்பு சாப்பிடவும்.
வேர்க்காய்களான உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி போன்றவை மண்ணில் வளர்வதால் பாக்டீரியாக்கள் மற்றும் அழுக்குகள் அதிகமாகவே இருக்கும். இவற்றினை ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவி பின்பு பயன்படுத்த வேண்டும்.
தர்ப்பூசணி, பலா, முலாம்பழங்களின் மேற்பரப்பில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டு இருப்பதால், இதனையும் ஓடும் நீரில் நன்றாக கழுவிய பின்பு பயன்படுத்தவும்.
முள்ளங்கியில் ஈ கோலை மற்றும் சால்மோனெல்லா உள்ளிட்ட பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் இதனையும் சமைக்கும் முன்பு நன்கு கழுவிய பின்பு பயன்படுத்தவும்.
கொத்தமல்லி, துளசி போன்ற மூலிகைகள் மண்ணிலிருந்து வளரும் போது அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் சுற்றியிருக்கும் என்பதால், நன்கு கழுவி உணர்த்திய பின்பு பயன்படுத்தவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |