இதெல்லாம் சாப்பிடுங்க.. கல்லீரல் நோய் வரவே வராது!
கல்லீரல் என்பது நம்முடைய உடலை இயங்கச் செய்யும் முக்கிய உறுப்புக்களில் ஒன்று.
தினமும் செய்யும் சில பழக்கங்கள் காரணமாக கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
சரியான உணவு பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இருந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நினைப்பவர்கள் வாழ்க்கை முறை மாற்றங்களையும் சில காய்கறிகளையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படியாயின், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள் என்னென்ன என்பதை பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
1. கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நினைப்பவர்கள் மாவுச்சத்து அல்லாத நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு படியாமல் பார்த்துக் கொள்ளும்.
2. கல்லீரல் நோய் வராமல் தடுக்கும் காய்கறிகளில் ப்ராக்கோலி மற்றும் காலிஃபிளவர் முதல் இடத்தில் உள்ளது. இதில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும்.
3. பச்சை இலை காய்கறிகளை அதிகமாக உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலுள்ள நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் பாலிபீனால்கள் ஆகிய கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
உதாரணமாக கீரைகளை கூட்டாகவோ, பொரியலாகவோ, பருப்பு சேர்த்து கடைந்தோ அல்லது ஆம்லெட், பராத்தா போன்ற வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |