மாரடைப்பு வராமல் தடுக்கும் காய்கறிகள் எவை தெரியுமா? கட்டாயம் சாப்பிடுங்க
இன்று பெரும்பாலான நபர்களுக்கு மாரடைப்பு என்பது சாதாரணமாக வந்துவிடுகின்றது. இவற்றினை தடுக்க சில காய்கறிகளை சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடும் காய்கள் இதயத்தை பாதுகாப்பாக வைக்குமாம்.
இதயத்தின் செயல்பாடு
நமது இதயத்தின் முக்கிய வேலை நமது உடலில் இருக்கும் ரத்தம் முழுவதையும் பம்ப் செய்வதாகும். நாம் பிறக்கும் போது ஆரம்பிக்கும் இதயத்தின் இந்த வேலை இறக்கும் வரை தொடர்கின்றது.
நாம் சில சமயங்களில் வாழ்வில் செய்யும் தவறுகள் நம் இதயத்தின் செயல்பாட்டைத் தடுப்பதுடன், இதயத்தில் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.
புகைப்பிடித்தல், ஆல்கஹால் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் என ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் காரணமாகவே இருக்கின்றது.
எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடுவதால், இதயத்தை நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
மாரடைப்பை தடுக்கும் காய்கறிகள்
பச்சை இலை காய்கள் இதயத்திற்கு மட்டுமின்றி முழு உடம்பிற்கும் நல்லது. இதில் தாதுக்கள், வைட்டமின்கள், புரதம் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றது. ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தின் மூலம் ஃப்ரீரேடிக்கல்களுக்கு எதிராக போராடுவதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.
தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் இதய நோய்களை குணப்படுத்துகின்றது. ரத்த அழுத்தத்தை குறைத்து இதய தொடர்பான பிரச்சினை தடுக்கின்றது.
பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ள அவகோடா பழத்தை சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை மிக விரைவாக குறைப்பதுடன், இதய தமனிகளில் ரத்தக்கட்டிகள் ஏற்படுவதை தடுத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.
ப்ரோக்கோலியில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ள நிலையில், இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் இதய பிரச்சினையிலிருந்து பாதுகாக்கின்றது.
இதே போன்று வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந்த குடைமிளகாய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இருதய பிரச்சினை வராமலும் தடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |