chanakya: இமைக்கும் நொடியில் சாபத்தை தெளிக்கும் குணம்- இந்த பெண்களை மறந்தும் விரும்பாதீங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய நீதிபடி குறிப்பிட்ட சில குணங்கள் கொண்ட பெண்களை எப்போதும் நம்பக் கூடாது என சாணக்கியர் கூறுகிறார்.
அந்த வகையில் மோசமான பழக்கங்கள் கொண்ட பெண்களிடம் காணப்படும் குணங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. ஏமாற்றும் குணம் கொண்ட பெண்களை ஒருபோதும் நம்ப வேண்டாம். இவர்கள் எப்போதும் மற்ற ஆண்களால் ஈர்க்கப்படுவார்கள். அது போன்ற சமயங்களில் கணவரை எதிரியாக நினைப்பார்கள். இது போன்ற பெண்களுடன் வாழ்ந்தால் அது ஆபத்தை ஏற்படுத்தும் கெட்ட குணம் கொண்ட பெண்களை நம்பக் கூடாது.
2. ஒரு சில் பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் நல்ல குணங்கள் இருக்காது. இப்படியான பெண்களை விரும்பும் போது அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அழகை விட பெண்ணின் கலாச்சாரம் மற்றும் கல்வி அறிவு தான் வாழ்க்கைக்கு அவசியம்.
3. ஒரு பெண்ணிடம் அளவுக்கு அதிகமாக பேராசை இருக்கும் போது அவர்களால் மற்றவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள். சில சமயங்களில் இது முழு குடும்பத்தையே அழித்து விடலாம். இப்படியான பெண்களை ஒருபோதும் நம்பக் கூடாது. பேராசை இருக்கும் பெண்களை நீங்கள் நிறுத்தவும் முடியாது.
4. தற்பெருமை கொண்ட பெண்களை ஒரு போதும் நம்ப வேண்டாம். சரஸ்வதி தேவியும், லக்ஷ்மி தேவியும் திமிர் பிடித்த பெண்களிடம் இருக்க மாட்டார்கள். இதனால் அவர்கள் எதிர்மறையான சக்திகளால் ஆளப்படுவார்கள். கர்வமாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளும் பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். அதுவே உங்களின் குடும்பத்தை தலைக்க வைக்கும்.
5. உலகில் ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டுமே கண்மூடித்தனமாக நம்புவார். அது யாரென்றால் அது அவர்களின் தாய். தாய்மையை மதிக்காத பெண்களை விரும்பாதீர்கள். பெண்கள் எப்போதும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அப்போதும் அவர்கள் செல்லும் வீடு அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
6. ஒரு குடும்பத்தின் அடித்தளமாக இருப்பது பெண் தான். அத்தகைய நிலைமையில் பெண்கள் எப்போதும் அறிவுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு கல்வியறிவு அவசியம் என சாணக்கியர் கூறுகிறார். ஆண்களை விட பெண்களே அதிகம் படித்தவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த குடும்பம் ஒழுக்கமானதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |