ஃப்ரிட்ஜ் மேலே இந்த பொருட்களை வைக்காதீங்க! கடன் சுமை அதிகமாகும்
நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் ப்ரிட்ஜின் மேல் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வீட்டில் நாம் வைக்கும் பொருட்களுக்கு கூட வாஸ்து சாஸ்திரம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் சமையலறையில் ப்ரிட்ஜ் பயன்படுத்துவதை நாம் அவதானித்திருப்போம்.
ஆனால் அந்த ப்ரிட்ஜின் மேல் பகுதியில் சில பொருட்களையும் நாம் அவதானித்திருப்போம். ஆனால் ப்ரிட்ஜின் மேற்பரப்பில் வைக்கப்படும் பொருட்களுக்கு கூட வாஸ்து இருப்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
அந்த வகையில் ப்ரிட்ஜின் மீது எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ப்ரிட்ஜின் டாப்பில் வைக்கக்கூடாத பொருட்கள்
மருந்து மாத்திரைகளை ப்ரிட்ஜின் மேற்புரத்தில் வைக்கும் பழக்கம் பெரும்பாலா நபர்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதிலிருந்து வெளிவரும் லேசான வெப்பம் மாத்திரையின் வீரியத்தினைக் குறைத்துவிடுமாம். இதனால் நோய் குணமாகாமல் அடிக்கடி மருத்துவ செலவுகள் வருமாம்.
பழைய கரண்ட் பில்கள், சூப்பர் மார்கெட் பில், கிழிந்த டைரி, தேவையற்ற காகிதம் இவற்றினை வைக்கக்கூடாது. ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதுடன், குடும்பத்தில் தேவையற்ற சண்டையும், பண கஷ்டமும் வரும்.

ப்ரிட்ஜின் மேலே தண்ணீர் பாட்டிலை வைப்பது தவிர்க்கவும். மின்சாரத்தில் இயங்கி வெப்பத்தினை வெளிப்படுத்துவதால் அக்னி தத்துவம் கொண்டது. ஜல மற்றும் அக்னி தத்துவம் மோதிக்கொள்வதால் குடும்ப தலைவருக்கு அதிக மன அழுத்தம் மற்றும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்படும்.
அழகாக இருக்க வேண்டும் என்பதற்கு செயற்கை பூக்கள் இவற்றினை வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை உறவுகளுக்குள் உண்மையான நெருக்கத்தினை குறைத்து பிரிவினை மற்றும் போலித்தனமான சூழலை ஏற்படுத்தும். ஆகவே உயிருள்ள நிஜ செடிகளை வைப்பது சிறந்தது.

அதே போன்று கனமான எலக்ட்ரிக் பொருட்களை ப்ரிட்ஜ் மீது வைப்பதைத் தவிர்க்கவும். இவை ப்ரிட்ஜின் ஆயுளைக் குறைப்பதுடன், வீட்டின் பொருளாதார நிலையையும் பாதிக்கும். தேவையற்ற கடன் சுமைகள், தொழில் ரீதியான மன அழுத்தம் இவற்றினை ஏற்படுத்தும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |