இந்த பிரச்சனை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்கனுமாம்...
சிக்கன் சாப்பிடுவதை எந்தெந்த பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிக்கன்
உடம்பில் அதிக கொழுப்பு, பாக்டீரியா, நச்சுக்கள் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய இறைச்சியான சிக்கனில், சில பகுதிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவற்றில் முக்கியமாக கோழியின் குடல், நுரையீரல், தலை, கழுத்துப்பகுதி, தோல் மற்றும் இறக்கையின் நுனிப்பகுதிகள் ஆகும்.
கோழியின் இரைப்பை, செரிமான மண்டல பகுதிகள் கோழி உண்ணும் உணவுக்கழிவுகளை சேமித்து வைக்கின்றது. இதனை சரியாக சுத்தம் செய்யவில்லை எனில், பல்வேறு ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள் உடலுக்கு நேரடியாக நுழைந்துவிடுமாம்.

இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படும். அதே போன்று தோலுடன் சிக்கனை சமைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இதில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் அதிகமாக உள்ளதுடன், இதில் ஊட்டச்சத்து மதிப்பும் இல்லையாம், எனவே கோழியின் தோல்கள் தேவையற்ற பாகமாகவே பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு சிக்கனில் பல பிரச்சனைகள் இருந்தாலும், சில பிரச்சனை உள்ளவர்கள் சிக்கனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். என்னென்ன பிரச்சனை உள்ளவர்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

யாரெல்லாம் சிக்கன் சாப்பிடக்கூடாது?
யூரிக் அமிலம் மற்றும் கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிக்கனில் பியூரின் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால், உடம்பில் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்படும்.
சிறுநீரக நோய்கள் உள்ளவர்களும் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இதில் மிக உயர்ந்த புரதச்சத்து, சிறுநீரகத்தை மேலும் பலவீனப்படுத்துகின்றது. புரதத்தை ஜீரணித்து நச்சுக்களை வெளியேற்றுவது கடினமாகவும், சிறுநீரகம் அதிக வேலைப்பளு ஏற்படுத்தி பிரச்சனை தீவிரமாகும்.

இயற்கையில் உடல் வெப்பம் அதிகமாக இருப்பவர்கள், தீவிர செரிமான கோளாறு, மலச்சிக்கல், மூல நோய் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை உடல் சூட்டை மேலும் அதிகரிக்கின்றது.
தோல் அரிப்பு, தடிப்பு, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
உடல் எடையில் கவனம் செலுத்துபவர்களும் சிக்கனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அளவாக எடுத்துக் கொள்ளவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |