உங்களுக்கு இந்த 5 பிரச்சனைகள் இருக்கிறதா? அப்போ சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்திடுங்க!
அதிகக் கொழுப்பு, பாக்டீரியா அல்லது நச்சுக்கள் என பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ள ஒரு இறைச்சி வகைதான் சிக்கன். அதனால்தான் அத்தகைய வாய்ப்புள்ள சிக்கனின் சில பகுதிகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். அவற்றில் முக்கியமானவை, கோழியின் குடல், நுரையீரல், தலை, கழுத்து பகுதி, தோல் மற்றும் இறக்கையின் நுனிப் பகுதிகள்.
அதிலும் கோழியின் இரைப்பையானது, கோழியின் செரிமான மண்டலத்தின் இந்தப் பகுதி, கோழி உண்ணும் உணவுக் கழிவுகளைச் சேமித்து வைக்கிறது. இதைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உண்டால், அதில் உள்ள பல்வேறு ஒட்டுண்ணிகளும் பாக்டீரியாக்களும் நேரடியாக நம் உடலுக்குள் நுழையக்கூடும். இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் உணவு நஞ்சாதல் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே முடிந்தவரை இவற்றை தவிர்ப்பதே நல்லது.
அதேபோலத்தான் சிக்கனின் தோல் பகுதியும். சில ஹோட்டல்களில் தோலுடன் சமைத்தே சிக்கனை தருகின்றனர். இதனால் சிலர் வீட்டிலும் தோலுடனே சிக்கனை சமைக்கின்றனர். ஆனால் சிக்கன் தோலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் அதிகம் உள்ளன. மேலும் இதில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை. கோழியின் உடலில் தேவையற்ற பாகமாக இருப்பவையே இந்த தோல்கள்தான்.
இப்படி சிக்கனில் சாப்பிடக்கூடாத பகுதிகள் பல இருந்தாலும், அவற்றின் சாப்பிட உகந்த சில பகுதிகளையும் ஒரு சில உடல்நல உபாதை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அது எந்தெந்த பிரச்சனைகள், ஏன் அவர்கள் சாப்பிடக்கூடாது என்ற விவரம், இங்கே விரிவாக....

யூரிக் அமிலம் மற்றும் கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஏனெனில் சிக்கனில் 'பியூரின்' என்ற வேதிப்பொருள் அதிகளவில் நிறைந்துள்ளது. உடல் இதனை உடைக்கும்போது யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி, மூட்டுகளில் படிந்து கடுமையான மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
சிறுநீரக நோய்கள் உள்ளவர்களும் சிக்கனை தவிர்க்கலாம். ஏனெனில் சிக்கனில் மிக உயர்ந்த புரதச்சத்து உள்ளது. சிறுநீரகம் ஏற்கனவே பலவீனமாக உள்ளவர்களுக்கு, அதிகப்படியான புரதத்தை ஜீரணித்து நச்சுக்களை வெளியேற்றுவது கடினம். இது சிறுநீரகத்தின் வேலைப்பளுவை அதிகரித்து பாதிப்பைத் தீவிரமாக்கும். சிக்கன்

இயற்கையிலேயே உடலுக்கு அதிக வெப்பத்தைத் தரக்கூடிய ஒரு உணவு. அதனால் ஏற்கெனவே உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள், குறிப்பாக தீவிர செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் மற்றும் மூல நோய் பிரச்சனை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடும்போது உடல் சூடு அதிகரித்து, பிரச்சனைகள் தீவிரமடையலாம்.
ஒரு சிலருக்கு சிக்கனே அலர்ஜியாக இருக்கும். இதனால் சிக்கன் சாப்பிட்டவுடன் தோல் அரிப்பு, தடிப்புகள் அல்லது ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் கோளாறுகள் உள்ளவர்களுக்குப் பாதிப்பு இன்னும் அதிகமாகலாம். அத்தகையவர்களும் தவிர்ப்பது நல்லது.

சிக்கனை தொடர்ந்து சாப்பிடுவதன் மற்றொரு பக்க விளைவு எடை அதிகரிப்பு. சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், ஃப்ரைட் சிக்கன் என பல சுவைகளில் அதை சாப்பிட்டாலும் எடையை அதிகரிக்கும். எனவே உடல் எடையில் அக்கறை செலுத்துபவர் எனில் சிக்கனை எப்போதாவது எடுத்துக்கொண்டால் போதும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |