சத்துக்களை அள்ளித்தரும் மீன் முட்டை... யாரெல்லாம் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும் மீன் ஆகும். மீனை விட மீன் முட்டையில் அதிக சத்துக்கள் உள்ள நிலையில், இவற்றினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மீன் அசைவ பிரியர்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். மீன் மட்டுமின்றி கடல் உணவுகள் அனைத்தும் பிரியமாக சாப்பிடுவார்கள்.
ஆனால் மீன் முட்டையினைக் குறித்து யாரும் சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆம் மீனில் உள்ள சத்துக்களை விட மீன் முட்டையில் அதிக சத்துக்கள் உள்ளது.
மீன் முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதனை சாப்பிடக்கூடாது என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

மீன் முட்டையின் நன்மைகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிகமாக கொண்டுள்ள மீன் முட்டையானது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் செய்கின்றது. மேலும் மூளை சுறுசுறுப்பாக செயல்படவும் செய்கின்றது.
மேலும் மீன் முட்டையினை சாப்பிடுவதால் கண் பார்வை பிரச்சனை சரியாவதுடன், கண் பார்வையும் மேம்படும்.
உயர் ரத்த அழுத்தத்தினைக் கட்டுக்கள் வைப்பதற்கு மீன் முட்டை உதவுகின்றது. ஏனெனில் இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் காரணமாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி ரத்த உறைவதையும், அலர்ஜி ஏற்படுவதையும் தடுக்கின்றது.

மீன் முட்டையினை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகின்றது. ஏனெனில் கெட்ட கொலஸ்ட்ரால் இதய பிரச்சனைக்கு முக்கியமாக இருக்கின்றது. ஆகவே மீன் முட்டை எடுத்துக்கொண்டால் இதய நோய் பிரச்சனை வராது.
மீன் முட்டை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைப்பதுடன், எந்த நோயையும் நெருங்கவிடாத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.
எலும்புகள் பற்களின் ஆரோக்கியமாக இருப்பதற்கு மக்னீசியம், வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் மிகவும் அவசியமாக இருக்கின்றது. எனவே மீன் முட்டையில் இந்த சத்துக்கள் அனைத்தும் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது.
மீன் முட்டை சாப்பிடுவது புற்றுநோயின் அபாயத்தை குறைக்கின்றது. பெண்கள் அதிகமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மீன் முட்டை சிறந்த உணவாக இருக்கின்றது. புற்றுநோய் அபாயத்தை தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் மீன் முட்டையில் அதிகமாக இருக்கும் பியூரின்கள் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றது.
கொழுப்பு சத்து அதிகமாக உள்ளவர்கள் இதனை குறைவாக எடுத்துக் கொள்ளவும். கடல் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் மீன் முட்டையை தவிர்க்கவும்.
கர்ப்பிணிகள் சமைக்காத அல்லது பதப்படுத்திய மீன் முட்டையை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |