இந்த 5 பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்காதீங்க... அப்பறம் உடல்நல பிரச்சனை ஏற்படும்
பழங்கள் ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் சில பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிப்பது உடல் பாதிப்பு ஏற்படுமாம். அந்த வகையில் எந்தெந்த பழங்கள் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பழங்களில் அதிகமான சத்துக்கள் இருப்பதால், நம்மில் அநேகர் ஆரோக்கியமாக இருப்பதற்கு பழங்களை முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர்.

அவ்வாறு நாம் சாப்பிடும் பழங்களில் நம்மை அறியாமல் சில தவறுகளை செய்தால் அவை உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆம் பழங்களை சாப்பிட்ட பின்பு சிலர் மறந்து தண்ணீர் குடித்துவிடுவார்கள்.
இவ்வாறு தண்ணீர் குடிப்பது உடல்நல பிரச்சனையை கொண்டு வரும். எனவே எந்தெந்த பழங்கள் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
பழங்களை சாப்பிட்டு தண்ணீர் குடிக்காதீங்க
வைட்டமின் சி சத்துக்கள் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கும் ஆரஞ்சு பழத்தில் உடம்பிற்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றது. இவை நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அமிலத்தன்மை அதிகமாக கொண்டுள்ள ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்ட பின்பு தண்ணீர் பருககூடாது.

ஆப்பிள் ஆரோக்கியம் கொடுக்கும் பழங்களில் ஒன்றாக இருக்கின்றது. இதிலுள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதுடன், இதில் பெக்டின் என்ற நார்ச்சத்து இருக்கின்றது. ஆகவே ஆப்பிள் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் வயிறு கோளாறு ஏற்படும்.
அன்னாசி பழத்திலுள்ள ப்ரோமிலைன் என்ற பொருள் உள்ளது. இந்த பழமானது மலச்சிக்கல், குடல் எரிச்சல், வயிற்று போக்கு, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை நீக்குகின்றது. ஆனால் அன்னாசியை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் செரிமானத்தை தடுத்துவிடுமாம்.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் இதில் பாப்பைன் என்ற சத்தும் காணப்படுகின்றது. பப்பாளியை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வயிறு மந்தம் பிரச்சனை ஏற்படும்.
ரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் வாழைப்பத்தினை சாப்பிட்ட பின்பு தண்ணீர் அருந்தினால் உடல்நலம் பாதிக்குமாம். ஏனெனில் இதில் மாங்கனீசு சத்து உள்ளதால் தண்ணீர் குடிக்கக்கூடாதாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |