இஞ்சி டீ யாருக்கு விஷமாக மாறும்? பலரும் அறியாத உண்மை இதோ
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட இஞ்சி டீ-யை யாரெல்லாம் பருகினால் விஷமாக மாறும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இஞ்சி
சமையலிலும், மருத்துவ துறையிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியை பலரும் டீ போட்டு அருந்தி வருகின்றனர்.
இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் காணப்படுவதுடன், ஜீரணம், சளி, இருமல் இவற்றிற்கும் நிவாரணம் அளிக்க உதவுகின்றது.
ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படும் இஞ்சியின் வெப்பத்தன்மை காரணமாக டீ மட்டுமின்றி, காய்கறிகள் மற்றும் சட்னி இவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால் ஒருசிலருக்கு இந்த இஞ்சி டீ-யானது தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், யாரெல்லாம் குடிக்கக்கூடாது? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இஞ்சி டீ யாரெல்லாம் குடிக்கக் கூடாது?
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை சர்க்கரை அளவை குறைத்து, மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் முற்றிலுமாக இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரத்த அழுத்தம் மேலும் குறைந்து இதய படபடப்பு மற்றும் பதற்றத்தினை ஏற்படுத்தும்.
பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள், இஞ்சி டீயை குடித்தால் பித்த நீர் அதிகமாக சுரந்து வேதனை மிகுந்த வலியை ஏற்படுத்துமாம்.
உடல் எடை அதிகரிக்க விரும்புவர்களுக்கும் இஞ்சி டீயை குடிக்கக்கூடாது. ஏனெனில் இது எடை குறைவதுடன், சீக்கிரமாக செரிமானம் ஆகிவிடும்.
கர்ப்பிணி பெண்கள் வாந்தி, குமட்டல் உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிக்க விரும்புவார்கள். ஆனால் ஒருபோதும் இஞ்சி டீயை குடிக்கக்கூடாதாம். ஏனெனில் இது வயிற்றிலுள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்.
குறைவான ரத்தம் உள்ளவர்கள், ரத்தப் போக்கு உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிக்கவே கூடாதாம்.
அல்சர் மற்றும் சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள், இஞ்சி டீ குடித்தால் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். இதே போன்று மருந்து மாத்திரிகள் எடுத்துக் கொள்பவர்களும் இஞ்சி டீயை பருக வேண்டாம்.
இஞ்சி டீ-யை அதிகமாக குடித்தால் செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதுடன், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல், இரப்பை பிரச்சனை போன்றவை ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |